13. படித்துவிட்டு வெளியே வரும் இளம் ஆடிட்டர்களால் ஒப்புதல் தரப்படும் கணக்கு! மோசடி மன்னன் அதானி

 








 

 










அதானி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அதானி குழுமத்தில் உள்ள தனியார் நிறுவனமாகும். 2022ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் சம்பாதித்த லாபம், 6.9 பில்லியன் டாலர்கள். வணிக சேவைகளை வழங்கியது, பிற பரிவர்த்தனைகளை அதானி குழும நிறுவனங்களுக்கு செய்து கொடுத்ததது என தனது வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றி ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை கட்டுமானத் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. தொழிலில் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு அதானி குழும தனியார் நிறுவனங்கள்,  முதலீட்டாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகும்.

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து, 31.9 மில்லியன் டாலர்களை அதானி குழும தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவன ஆவணங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் துணை நிறுவனங்களான இவை, சம்பாதித்துள்ள வருமானம்:

1.அதானி பவர் முந்த்ரா -12.2 மில்லியன் டாலர்கள்

2.அதானி பவர் மகாராஷ்டிரா -12.2 மில்லியன் டாலர்கள்

3. ராய்பூர் எனர்ஜென் -7.7 மில்லியன் டாலர்கள்

அதானி பவர் நிறுவனம், கணக்குத் தணிக்கை செய்யப்பட்டு 615 மில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் குழப்பமான பல்வேறு வடிவங்களைக் கொண்டவை. 2022ஆம் ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், 100 மில்லியன் டாலர்களை நெக்ஸ்ட் (நார்த் குயின்ஸ்லாந்து எக்ஸ்போர்ட் டெர்மினல்) என்ற நிறுவனத்திற்கு கடனாக வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.



 ஆஸ்திரேலியாவில் உள்ள அதானி அபோட் பாய்ன்ட் புரோஜெக்ட் என்ற நிறுவனத்தின் புதிய பிராண்ட் பெயர்தான் நெக்ஸ்ட். இந்த நிறுவனம், ஆண்டுக்கு 50 மெட்ரிக் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்து வருகிறது.

அதானி குடும்பத்தின் அறக்கட்டளை ஒன்றால், நெக்ஸ்ட் நிறுவனம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் வர்ஜின் தீவில் அதானி குடும்ப அறக்கட்டளை செயல்படுகிறது. வரி சலுகை கொண்ட தீவுப்பகுதி இது. இங்கு, ஆஸ்திரேலிய பெருநிறுவன ஆவணங்கள் மூலம் நெக்ஸ்ட் என்ற நிறுவனம், அதானி குடும்ப அறக்கட்டளையால் நிர்வாகம் செய்யப்படுவது தெரிய வந்தது. (ப.31, 61)

அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து, துறைமுக பணிகளை எதற்காக அதானி குழும தனியார் நிறுவனங்கள் ஏற்றுச் செய்தன, நிதியைப் பெற்றன  என்பது குழப்புகிறது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்ள முதலீட்டு நிதியை, குழுமத்தின் தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வது முரண்பாடாக உள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனம், தனது கணக்குகளில் மோசமான விதிமீறல்களை, தவறுகளைக் கொண்டுள்ளது எப்படி? யாருமே இதைக் கவனிக்காதது ஏன்? என்ற கேள்வி ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆராய்ச்சியில் எழுந்தது.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியில், அதானி குழுமத்தின் நிறுவனங்களில் உள்ள நிதி, செலவு என்பது குழப்பம் கொண்டதாகவே இருந்தது. நிதி நிர்வாக தலைவரின் செயல்பாடு, கணக்குத் தணிக்கையாளரின் நம்பிக்கைத்தன்மை, சுதந்திரமான நிறுவனத்தின் முகவர்கள் என மூன்று விஷயங்களும் முரண்பாடுகள் கொண்டவையாகவே உள்ளது.

பெருநிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் உள்ளவர்களை நிர்வாகத்தினர் அதிக காலம் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். அதானி குழுமத்தில் கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர் அதிக ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக உள்ளனர். ஆனாலும் கூட நிதித்துறைத் தலைவர் என்ற பதவியில் உள்ளவர்களை நிறுவனத் தலைவர் கௌதம் அதானியால் தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

அதானி குழுமத்தில், எட்டு ஆண்டுகளில் ஐந்து நிதித்துறை தலைவர்கள் மாறியுள்ளனர். இப்படி வேலை செய்த ஐந்து நிதித்துறை தலைவர்களும் குறுகிய காலத்தில் பணியை விட்டு விலகிச் செல்ல குழுமத்தில் உள்ள நிதிச்சிக்கல்களும் உள்புற நிதிக் கட்டுப்பாட்டு பிரச்னைகளுமே காரணம்.

#

Date of Resignation

CFO Name

Source

1

Current CFO

Jugeshhinder singh

Pg.32

2

April 16th 2019

Rakesh shah

Pg.32

3

May 1st 2018

Rajiv Nayar

Pg.43

4

August 12th 2017

Ameet h.desai

Pg.43

5

May 17th 2014

Devang s desai

Pg.65

 

உண்மையில் அதானி குழுமத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கூட நிதித்துறை தலைவர்  பதவி என்பது எளிதாக தக்க வைத்துக்கொள்வதாக இல்லை. இத்தனைக்கும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தும் கூட நிலை மாறவே இல்லை.

Entity

CFO Resignations

Source

Adani Enterprises

5 CFOs in 8 years

Annual reports (Pgs.32,43,65)

Adani Green Energy

3 CFOs in years

Annual reports (pgs.146,33,35)& 22 release

Adani ports

3 CFOs in 5 years

Annual reports (pg.262,50)

Adani power

3 CFOs in 5 years

Annual reports (pgs.41,27)

Adani Total Gas

2 CFOs in 4 years

Annual reports (pgs. 63, 42)

Adani Transmissions

2 CFOs in 2 years

Annual reports (pg.200)

 

பொதுவாக பிரபலமான பெருநிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்து ஒப்புதல் வழங்க புகழ்பெற்ற கணக்கு தணிக்கை நிறுவனங்களை நாடுவார்கள், இதன் காரணமாக, நிறுவனத்தின் செயல்பாடு பற்றி முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்ற பின்னணி காரணமும் உண்டு.

அதானி டோட்டல் கேஸ், நிறுவனம் ஏராளமான குழப்பம் கொண்ட கணக்கு வழக்குகளைக் கொண்டது.  குறிப்பாக அதானி என்டர்பிரைசஸ், இந்த நிறுவனத்தில் 156 துணை நிறுவனங்கள் உண்டு. நிறைய கூட்டு நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனால், இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்ய அனுபவம் வாய்ந்த திறன் வாய்ந்த கணக்குத் தணிக்கை நிறுவனங்களையே யாராக இருந்தாலும் தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், இங்கு அதானி குழுமம் எடுத்த முடிவுதான் ஆச்சரியம் தரக்கூடியது. ஷா தாந்தரியா என்ற சிறு கணக்கு தணிக்கைத் நிறுவனத்தை, பட்டியலிடப்பட்ட இரண்டு அதானி குழும நிறுவனங்களுக்கென நியமித்தது.







ஹிண்டன்பர்க் அமைப்பு, ஆராய்ச்சியில் இறங்கியபோது ஷா தாந்தரியா நிறுவனத்தின் வலைத்தளம் இயக்கத்தில் இல்லை. பிறகு, இப்போது நிறுவனத்திற்கு வலைத்தளமே இல்லை என செய்தி கிடைத்துள்ளது. பழைய வலைத்தளத்தை ஆராய்ந்து பார்த்தபோது, 7 பணியாளர்களும், நான்கு கணக்கு தணிக்கை நிறுவன கூட்டாளிகளும் இருப்பது தெரிய வந்தது.(2020 பிப்ரவரி மாதப்படி).

நிறுவனத்தின் கூட்டாளிகளைப் பற்றிய பக்கத்தைப் பார்த்தபோது, அதில் மூன்று நபர்களின் வயது இருபதுகளில் இருந்தது. நாட்டின் பிரமாண்டமான பெருநிறுவனத்தின் கணக்குகளை இருபது வயதில் உள்ள கணக்குத் தணிக்கையாளர் எப்படி பார்த்து அங்கீகாரம் தருகிறார்?

அதானி  என்டர்பிரைசஸ் ஃபினான்சியல்ஸ் நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையாளர் கூட்டாளி என அங்கித் ஆஜ்மேரா என்பவர் பெயர் கூறப்பட்டிருந்தது. இவருடைய வயது 24. இப்போதுதான் நிதி அறிக்கைகளை பார்த்து கையெழுத்திட தொடங்கியுள்ளார்.

ஷா தாந்தரியா கணக்குத் தணிக்கை நிறுவனம், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் சிறிய அலுவலகத்தைக் கொண்டுள்ளது. தனது அலுவலகத்திற்கு வாடகையாக இந்திய மதிப்பில் மாதம்தோறும் 32 ஆயிரம் ரூபாயைக் கொடுக்கிறது. இந்த தகவல் இந்திய நிறுவனங்கள் ஆவணங்களின்படி தெரிய வந்தது.

பிரைம் எனும் பட்டியலிடப்பட்ட தகவல்தளத்தில் ஷா தாந்தரியா நிறுவனத்தைப் பற்றி தேடியபோது, அந்த நிறுவனம் குளோப் டெக்ஸ்டைல்ஸ் என்ற 7.8 மில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனத்திற்கு கணக்கு தணிக்கை செய்து வழங்கியுள்ளது.இது ஒரு சிறிய நிறுவனமாகும்.   

 நன்றி 

திரு. இரா.முருகானந்தம் 

டெனர்.காம் 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்