9. வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலமாக நடந்த நிதி முறைகேடு - மோசடி மன்னன் அதானி
வினோத் அதானி, தான் உருவாக்கிய
போலி நிறுவனங்களைப் பற்றிய கவனம் கொள்ளாமல் இல்லை. வரி விலக்கு கொண்ட நாடுகளில் போலி
நிறுவனங்களை உருவாக்கியவர், அதன் மீது பிறருக்கு சந்தேகம் வராமல் இருக்கவே அவற்றுக்கென
தனியாக வலைத்தளங்களை உருவாக்கி வைத்தார்.
அந்த வலைத்தளங்களில் காணப்படும்
சில அம்சங்களைப் பார்ப்போம்.
பெரும்பாலான வலைத்தள பெயர்கள்
அனைத்தும் ஒரே நாளில் தனித்தனி வணிக நிறுவனங்கள் போல உருவாக்கப்பட்டவை. எ.டு. ஹிண்டன்பர்க்
அமைப்பு செய்த ஆராய்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டவை
என தெரிய வந்தது. மீதி ஐந்து நிறுவனங்கள் 2016 ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டவை.
அனைத்து வலைத்தளங்களின்
பக்கங்களின் தலைப்புகளும் ஒன்று போலவே அமைந்திருந்தன. முகப்பு, நிறுவனம் பற்றி, சேவைகள்,
கேலரி (விலை கொடுத்து வாங்கிய புகைப்படங்கள்), தொடர்புகொள்ள என தலைப்புகள் அப்படியே
மாறாமல் இருந்தன.
தொடர்பு முகவரியில் உள்ள
முகவரி, வணிக முகவர் ஒருவரின் முகவரியைக் கொண்டிருந்தது. உண்மையான வணிக நிறுவனத்தின்
பெயரில் முகவரி இல்லை.
நிறுவனத்தில் வேலை செய்யும்
ஊழியர்கள், குழுக்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை. விதிவிலக்காக சில இடங்களில் மட்டும்
வினோத் அதானி, சுபிர் மித்ரா (அதானி தனியார் முதலீட்டு நிறுவனத் தலைவர்) ஆகியோர் பெயர்கள்
குறிப்பிடப்பட்டிருந்தன.
Entity Name 1.Concord
Trade & Investment Pvt Ltd 2.Krunal
Trade & Investment 3.Resource
Asia Trade & Investment 4.Atlantis
Trade & Investment Pvt Ltd 5.Vakoder
Investments Limited 6.Kommerce
Trade & Services DMCC 7.Worldwide
Emerging Market Holding 8.Afro
Asia Trade and Investment\ 9.
Emerging Market Investment DMCC 10.
RVG Exim DMCC 11. Universal Trade and Investments Ltd.[43] 12.
Adani Global Investment DMCC |
Jurisdiction Mauritius Mauritius Mauritius Mauritius Cyprus UAE Mauritius Mauritius UAE UAE Mauritius UAE |
Website http://concordtinvest.com/ http://krunaltrade.com/ http://www.atlantistinvest.com/ http://wwemh.com http://www.afroati.com/ http://www.emidmcc.com/ http://www.rvgexim.com/ http://untrin.com/ http://adaniglobalinvestment.com |
Domain Registered 2017.05.04 2017.05.04 2017.05.04 2017.05.04 2017.05.04 2016.06.01 2016.06.01 2016.06.01 2016.06.01 2016.06.01 2016.06.01 2015.12.17 |
வலைத்தளத்திற்கு பொருத்தமே
இல்லாதபடி நிறுவனம் வழங்கும் சேவை என கன்சம்ஷன் அப்ராட், கமர்ஷியல் பிரசன்ஸ் என்ற பெயர்களில்
சேவைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அதானி குழும நிறுவனங்களில்
இயங்கும் தனியார் நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் அதை லாபமடைந்ததாக மாற்றிக் காட்ட வெளிநாட்டிலுள்ள
போலி நிறுவனங்களின் நிதி பயன்படுகிறது. இதன்மூலம் நிறுவனம் லாபம் அடைந்தாகவும், பணப்புழக்கம்
கொண்டதாகவும் மாற்றிக் காட்டப்படுகிறது. அதானி குழும நிர்வாகத்தினரைத் தவிர வேறு யாருக்கும்
நிறுவனம் எப்படி இயங்குகிறது என்று தெரியாது.
அதானி குழுமத்திலுள்ள தனியார்
நிறுவனத்திற்கு குருநாள் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட் நிறுவனம் 253 மில்லியன் டாலர்களை கடனாக
அளித்தது. இந்த கடன் கொடுத்த நிறுவனம், வினோத் அதானிக்கு சொந்தமானது. மொரீஷியஸில் இயங்கி
வருகிறது.
அதானி குழுமத்தில் உள்ள
தனியார் நிறுவனம், பட்டியலிடப்பட்ட நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு,
138 மில்லியன் டாலர்களைக் கடனாக வழங்கியது.
அதானி குழுமத்திற்குச்
சொந்தமான வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் நிதி அதானி குழுமத்தின் தனியார் நிறுவனங்களுக்கு
முதலில் பரிவர்த்தனை செய்யப்படும். பிறகு அப்படியே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு
நிதி மாற்றப்படும். கௌதம் அதானியின் உறவினர்கள் வெளிநாடுகளிலுள்ள நிதியைக் கட்டுப்படுத்தி
நிதி பரிவர்த்தனையைச் செய்கிறார்கள்.
குருநாள் ட்ரேட் அண்ட்
இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் மூன்று தலைவர்கள் யாரென்று பார்த்தால், நிதி பரிவர்த்தனைகளை
எளிதாக புரிந்துகொள்ளலாம். முதல் தலைவர், வினோத் அதானி. இவர் கௌதம் அதானியின் சகோதரர்.
அடுத்து, அதானி குழுமத்தின் நிதி முதலீட்டு நிறுவன இயக்குநரான சுபீர் மித்ரா.
குருநாள் நிறுவனத்திற்கு
அலுவலக முகவரி அல்லது தொலைபேசி எண் கூட கிடையாது. இதையும் அதன் ஆவணங்களைப் பற்றி ஆய்வு
செய்ததில் தெரிய வந்தது. லிங்க்டு இன் தளத்தில் குருநாள் முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றும்
பணியாளர்கள் பற்றிய விவரங்கள் உள்ளீடு செய்யப்படவில்லை. அதன் வலைத்தளத்தில் வேறு வணிகப்
பரிவர்த்தனைகள் செய்த தடயங்களும் கிடைக்கவில்லை. அதன் சேவைகளைப் பற்றி என்ன கூறியிருந்தது
என்றால், ‘’தயாரிப்பாளர், வாடிக்கையாளர் இடையே விற்பனை, விநியோகம் ஆகிய சேவைகளை வழங்குவதாக’’
கூறியிருந்தது.
2009, 2010 ஆகிய ஆண்டுகளில்
253 மில்லியன் டாலர்களை அதானி குழும தனியார் நிறுவனமான சன்போர்ன் டெவலப்பர்ஸ் பி.லிட்டிற்கு
கடனாக வழங்கியுள்ளது. இது, நில விற்பனை நிறுவனமான சன்பர்ன் நிதி ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
(ப.24, 45)
சன்போர்ன் நிறுவனத்தின்
ஆவணங்களில், மொரீஷியஸைச் சேர்ந்த நிறுவனம் என குருநாளைக் குறிப்பிட்டிருந்தது. அந்த
நிறுவனம் சன்போர்னுக்கு எப்படி தொடர்புபடுகிறது என்ற விவரங்கள் கூறப்படவில்லை. (ப.195,
47)
இறுதியாக நமக்குத் தெரிவது,
வினோத் அதானியின் நிதி நிறுவனம் முறையாக எந்த வணிக சேவையையும் வழங்கவில்லை. அந்த நிறுவனத்தின்
வேலை, அதானி குழுமத்தின் தனியார் நிறுவனங்கள் வழியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு
(அதானி என்டர்பிரைசஸ்) நிதியை பரிவர்த்தனை செய்வதுதான் என உறுதியாகிவிட்டது.
குருநாள் நிறுவனம், பிற
நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதாக விளம்பரப்படுத்தவே இல்லை. இந்த நிலையில் பெருமளவு நிதி, அதானி குழும நிறுவனங்களுக்கு சென்றிருப்பது
நிதி மோசடியாகவே பொருள் கொள்ளவேண்டும்.
எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்
டிஎம்சிசி என்ற நிதி நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம்
நிதியை கடனாக வழங்கி வருகிறது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால், இந்த நிறுவனம்,
அதானி குழுமத்தின் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் துணை நிறுவனத்திற்கு 1 பில்லியன்
டாலர்களை கடனாக வழங்கியுள்ளது.
எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் டிஎம்சிசி என்ற
நிறுவனத்தின் ஊழியர்களை, லிங்க்டு இன் வலைத்தளத்தில் கண்டறிய முடியவில்லை. இணையம் வேண்டாம்,
வேறு வகையாக தேடலாம் என ஹிண்டன்பர்க் அமைப்பு யோசித்தது. அந்த வகையில் நிறுவனத்தின்
வணிக ஆவணங்களில் தேடியபோது, எமர்ஜிங் நிறுவனம்
எந்த வணிக பரிவர்த்தனைகளையும் செய்திருக்கவில்லை. இதற்கு வாடிக்கையாளர்களும், ஒப்பந்தங்களும்
கூட கிடையாது. முகவரியைச் சோதித்ததில், இந்த நிதி முதலீட்டு நிறுவனத்திற்கு சொகுசு
குடியிருப்பில் அலுவலகம் அமைந்துள்ளது. எனவே, விவரங்களை தொகுத்துப் பார்த்தால் இந்த
நிறுவனமும் போலி நிறுவனம்தான்.
இங்கு எழும் கேள்வி ஒன்றுதான்.
அதானி குழுமத்தின் மின்சார உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு எமர்ஜிங் இன்வெஸ்ட்மென்ட்
நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களை கடன் நிதியாக அளித்தது எப்படி?
நிதி முதலீட்டு நிறுவனம் வணிக பரிவர்த்தனை செய்ததற்கான
எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த நிறுவனத்தை கௌதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்படுத்தி
நிதி முறைகேடுகளை செய்து வருகின்றனர். அதன் வலைதளத்தில் ‘’வினோத் எஸ் அதானியின் நிதியை
முதலீடு செய்கிறோம்’’ என தகவல் கூறப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டில் தொடங்கி
செயல்பட்டு வரும் நிதி நிறுவனம் (வகோதர்), வினோத் அதானிக்கு சொந்தமானது. இந்த நிறுவனம்
அதானி குழுமத்தின் தனியார் நிறுவனத்தில் 85 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
ஆனால் இந்த நிறுவனத்திற்கும் அதானி குழும நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு என்று விளக்கப்படவில்லை.
முன்னர் கூறியதுபோல, இப்படி வெளிநாட்டிலிருந்து வரும் நிதி, அதானி குழும தனியார் நிறுவனங்களின்
வழியாக சென்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குச் செல்கிறது.
அதானி எஸ்டேட்ஸ் பி. லிட்.(அதானி
எஸ்டேட்ஸ்) என்ற நிறுவனம், 85 மில்லியன் டாலர்களை வகோதர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின்
வழியாக பெற்றிருக்கிறது. இது வினோத் அதானிக்கு சொந்தமானது.
2012ஆம் ஆண்டு வகோதர் இன்வெஸ்ட்மென்ட்
நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தலைவர்கள் யார் என்று பார்த்தால் வினோத் அதானி, சுபீர்
மித்ரா என நிறுவன ஆவணங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதானி எஸ்டேட்ஸ் நிறுவனம், 2020ஆம்
ஆண்டு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றது. பிறகு, 2021ஆம் ஆண்டு
பத்து நிறுவனங்களிலிருந்து நிதியை பெற்றுள்ளதை ஆண்டு அறிக்கை மூலம் அறிய முடிகிறது.
(ப. 142, ப.135)
நன்றி
இரா.முருகானந்தம்
tenor.com
கருத்துகள்
கருத்துரையிடுக