இடுகைகள்

அலட்சியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உப்பு தின்றால்....

தூத்துக்குடி யில் தயாரித்து வரும் ****ன் என்ற பிராண்டில் சிறு கற்கள் எப்போதும் காண கிடைக்கின்றன. கமிஷன் கொடுத்து கடையில் பொருட்களை சரியாக தரமாக கொடுக்க முடியவில்லை. இனி உப்புக்காக வேறொரு பிராண்டை தேடிப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் லாபத்தை பற்றி மட்டுமேயும் மக்கள் ஏமாற்றப்பட்டு காசுக்கான மதிப்பு குறையாத பொருட்களை தேட வேண்டியுள்ளது. உப்பை தூய்மை செய்யக்கூட கருவிகள் இல்லையா? எப்போதும் போல உள்ள இந்திய அலட்சியமா என்று தெரியவில்லை.

ஊட்டச்சத்துக்குறைவை இந்தியா தீர்க்குமா?

படம்
qrius 2022க்குள் இந்தியா ஊட்டச்சத்துக்குறைவு பாதிப்பை நீக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது இந்திய அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தை ஊட்டச்சத்துக்குறைவைப் போக்க தேசிய அளவில் அமல்படுத்தி வருகிறது. ஆனால் இத்திட்டம் சிறப்பாக செயல்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். ஐ.நா அமைப்பின் சூழலியல் நோக்கங்கள் எனும் திட்ட அடிப்படையில்  குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பாதிப்பு பற்றிய அறிக்கை கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் வெளியிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். 1975ஆம் ஆண்டு ஐசிடிஎஸ் எனும் திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. பின்னர், தொண்ணூறுகளில் இத்திட்டத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பத்து லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதில் 62 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவால் இறந்தனர். உலகளவில் பசியால் அவதிப்படுவோரின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்தில் உள்ளது. அதாவது, 21.9 சதவீத முன்னேற்றம் மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவை விட பிரேசில், நேபாளம், பாகிஸ்தான் ஆகியவை சிறப்பான முன்னேற்றத்...