இடுகைகள்

இம்தியாஸ் அலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கதை சொல்லியாகும் பொறியியல் மாணவனின் போராட்டம்! தமாஷா 2015 - இம்தியாஸ் அலி

படம்
         Directed by Imtiaz Ali Music by A. R. Rahman Cinematography Ravi Varman   நம் மனம் சொல்லும் விஷயத்தை செய்வதா, குடும்பம் சொல்லும் சமூக அழுத்தத்திற்கு இடம் கொடுத்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதா என்று சொல்லும் படம்.   பிரான்சில் கார்சிகா என்ற நகரில் டான், மோனா டார்லிங் என்ற இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பில் மோனா டார்லிங் தனது பாஸ்போர்டை, பேக்கை பறிகொடுத்துவிடுகிறாள். அவளுக்கு டான் உதவுகிறான். அறை, உணவு கொடுத்து அவளை தங்க வைக்கிறான். அவன் அங்கு ஜாலியாக நாடோடி போல தங்கி இருக்கிறான். இருவரும் ஒருவரைப் பற்றி பொய்யை மட்டும் சொல்வது என முடிவு செய்துகொண்டு ஜாலியாக ஒன்று சேர்ந்து திரிகிறார்கள்.  மோனாவுக்கு டான் மீது காதல் ததும்பி வழியும் தருணம் வரும்போது, அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. பிரான்சிலிருந்து கிளம்பி இந்தியாவின் கொல்கத்தாவிற்கு வருகிறாள் மோனா. ஆனால் டானை அவளால் மறக்கவே முடியவில்லை. கிளம்பும்போது கொடுத்த முத்தம் வரை அனைத்தும் அவளுக்கு பரவசத்தை அளிக்கிறது.  இந்த நிலையில் டெல்லிக்கு அலுவலக விஷயமாக வருபவள் டானை சந்திக்கிறாள். டான் இப்போது முன்னர் சந்தித்தது போல தனது பெயரை