இடுகைகள்

இன்டர்வியூ டிப்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேட்க கூடாத கேள்விகள்!

படம்
பிளஸ் பாய்ண்ட்   ஜெ . திருமால்முத்து கேட்க கூடாத கேள்விகள் ! இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற டிப்ஸ் தேவைதான் . ஆனால் இன்டர்வியூவில் சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள் . வேலை அங்கு கிடைக்காது எனினும் , அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென புரிவது லாபம்தானே ! இந்த வாரம் அத்தகைய கேள்விகளின் லிஸ்ட் இதோ ! உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம் . ஆனால் அவர்கள் உங்களை தெரியாது என்று கூறுகிறார்களே ? இதன் அர்த்தம் ஒன்றுதான் . ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய் . இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது . வேலையில் சேரும் முன்பே நீங்கள் டுபாக்கூர் வேலைகள் பார்த்தால் எப்படி ? உங்களுடைய ஃபேஸ்புக் , ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம் அதில் ..? சமூக வலைதளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள நிறுவனம் குறித்த சர்சை கருத்துகள் , உங்கள் தோழர்களோடு மதுபானம் உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம் . இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே தெரிந்துவிடும் . எனவே சோஷியல் தள