இடுகைகள்

கட்டுரைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுமுடக்க காலத்தில் வாசிக்கப்பட்ட முக்கியமான நூல்கள்! - வாசிக்கலாம் வாங்க

படம்
              வேகம் பிடிக்கும் வாசிப்பு கொரானோ காலத்தில் மக்களின் வாசிப்பு நேரம் 9 மணி நேரம் முதல் பதினாறு மணி நேரம் வரை கூடியுள்ளது என நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது . பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி மக்களின் வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக மாற்றியது புத்தகங்கள்தான் . இவைதான் , மக்களுக்கு உண்மையைத் தேடும் பயணத்திற்கு துணையாக நின்றன . அரசியல் சூழ்நிலை தடுமாற்றம் , நோய்ப்பரவல் , மரணம் , பொருளாதார பிரச்னைகள் என நாடு கடும் போராட்டத்தை சந்தித்து மீண்டு வந்துள்ளது . இப்போது இரண்டாவது அலை தொடங்கியுள்ளது . மேற்கு நாடுகளிலும் மூன்றாவது அலையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . வயது வந்தோருக்கான கட்டுரைகளின் மூலமாக கிடைக்கநும் வருமானம் அமேஸானில் 22. 8 சதவீதமாக அதிகரித்துள்ளது . சுய முன்னேற்றம் , வாழ்க்கை வரலாறு , ஆன்மிகம் , வரலாறு ஆகிய துறைகளும் மக்களால் அதிகம் வாசிக்கப்பட்டுள்ளன . இப்படி வாசிக்கப்பட்ட நூல்களில் சிலவற்றைப் பார்ப்போம் . அன்ஃபினிஸ்டு எ மெமோர் இப்போது அதிகம் விற்றுவரும் சுயசரிதையாகவும் நியூயார்க் டைம்ஸ் விற்பனைப்பட்டிய

சிறந்த கட்டுரை நூல்கள் 2019!

படம்
அயர்லாந்தில் செய்யப்பட்ட கொலை, அதன்பின்னர் அந்த நாட்டை எப்படி இங்கிலாந்துக்காரர்கள் ஆக்கிரமித்தனர், அங்கு வாழ்ந்த மக்களின் நிலை என நேர்த்தியாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா புயலை எத்தனை பேருக்குத் தெரியும்? கத்ரீனா கைஃபை தெரிந்தவர்களை விட குறைவுதான் அல்லவா. அந்த புயலில் வீட்டை இழந்தவர் எழுதிய நினைவுக்குறிப்புதான் இந்த நூல். பாசமும், பாதுகாப்பும் தந்த வீட்டை இழந்தபோது அவர் அடையும் துயரம் நமக்கே நேர்வது போல இருக்கிறது. தன் கதையின் வழியாக நியூ ஓர்லியன்ஸ் நகரின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். பூமியில் மனிதர்கள் உருவாக்கி விண்ணுயரும் கட்டிடங்களுக்கு சளைக்காத கட்டுமானங்களை பூமிக்கு அடியிலும் உருவாக்கியுள்ளனர். எழுத்தாளர் ராபர்ட் அதைத்தான் தேடிப்போய் அந்த அனுபவங்களை நூலாக செதுக்கியிருக்கிறார். தன் சொந்த அனுபவங்களை இழைத்து அதில் ஓரினச்சேர்க்கையின் மோசமான பிரச்னைகளை குழைத்து வித்தியாசமான மொழியில் நூலை எழுதியுள்ளார்.அதற்காகவே நீங்கள் நூலை வாங்கிப்படிக்கலாம். எழுத்தாளர் ஹார்ப்பர் லீ, திடீரென ஒரு கதையை எழுதுவதாக சொல்லி பின்னர