அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள்
அமரத்துவம் வாய்ந்த எட்டு நபர்கள் - சீனாவை ஆளும் சிவப்புக் குடும்பங்கள் மாவோ காலத்தில் நான்கு நபர்கள் அரசியல், சமூக, பொருளாதார பலம் பெற்றவர்களாக வலம் வந்தனர். அவர்கள்தான் கட்சியில் செல்வாக்கு பெற்றவர்கள். 1976ஆம் ஆண்டு மாவோ மறைந்தபிறகு டெங் ஷியாவ்பிங் தலையெடுத்தார். அவர், மாவோ தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென உருவாக்கிய தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களை மாற்றியமைத்தார். இரும்பு அரிசிக் கிண்ணம் எனும் திட்டம் இந்த வகையில் ஒழித்துக்கட்டப்பட்டது. அரசு நிறுவனத்தில் வேலையில் இருந்த பணியாளர்களுக்கு சலுகை கட்டண வீடு, மருத்துவம் இலவசம், காப்பீடு உண்டு, இன்னும் நிறைய சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக அவர் தம் பிள்ளைகளுக்கு கல்வி இலவசம். ஆனால், டெங் தனிநபர்கள் அனைவரும் செல்வந்தர்களாகுங்கள் என்ற கோஷத்துடன் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அதற்குப் பிறகுதான் எட்டு குடும்பங்கள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளே நுழைந்தனர். சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள், உறுப்பினர்களிடையே வினோத வாழ்க்கை முறை உண்டு. அதாவது, பொதுவாழ்க்கை, தனிவாழ்க்கை, ரகசியவாழ்க்கை என மூன்று வாழ்க்கை உண்டு. சீன...