கண்கள் சொல்லும் காதல் சேதி
கண்கள் சொல்லும் காதல் சேதி
கண்கள் காதல் சேதியை சொல்வது பிறகு, முதலில் அதன் அடிப்படை பார்வைதான். பார்வையால் பொருட்கள் தட்டுப்படும். பழக்கம் காரணமாக கண்கள் வழியாக மூளை அதன் தகவல்களை அறிந்துகொள்ளும். மேற்படி தேவையான தகவல்களை பகுத்தாய்ந்து பார்த்து கட்டளைகளை வழங்கும்.
நீங்கள் ஒன்றை வாசிக்கும்போது, கணிதம் போடும்போது, தீவிரமாக யோசிக்கும்போது உங்கள் கண்களில் உள்ள பாப்பா அதற்கு ஏற்ப மாறுபாடுகளை அடையும்.
ஒருவரின் கண்களின் நிறம் நீலம், பச்சை, கரும்பழுப்பு, காப்பிக்கொட்டை நிறம் என அமையலாம். இதற்கு மெலனின் என்ற நிறமியே காரணம்.
கண்கள் நீருக்குள் உள்ள ஒரு கேமரா போல. கண்களைச் சுற்றி நிறைய நீர்மங்கள் உள்ளன. கண்கள் செயல்பட ஆறு தசைகளின் உதவி தேவை.
தினசரி நாம் 9400 முறை இமைக்கிறோம். ஆறு தசைகளும் தினசரி 1 லட்சம் முறை அசைகின்றன.
இரு கண்களும் இருவேறு நிறங்களில் இருக்கிறதா? வாழ்த்துகள் உங்களுக்கு ஹெட்ரோகோமியா உள்ளது.
கண்களில் பார்க்கும் காட்சிகளில் உள்ள நிறங்களை பிரித்தறியும் வசதி உள்ளது. கண்களிலுள்ள நிறமிகள் வேலை செய்யாதபோது, நிறக்குருடு ஏற்படுகிறது.
மனைவியின் அக்குள் மணம்
இது பாவலர் அறிவுமதி எழுதியது. ஆணுக்கு ஈர்ப்பாக உள்ளதை கவிதையாக எழுதும்போது எழுதியிருப்பார்.ஆக, நாம் பேசுவது வாசனைகளை எப்படி அடையாளம் காண்கிறோம். அதில் இருந்து என்ன தெரிந்துகொள்கிறோம் என்பதுதான். நம்மால் லட்சம் கோடி வாசனைகளை தனியாகப் பிரித்து கூறமுடியும். குடிக்கும் மதுவை வைத்தே அதன் பிராண்டுகளைக் கூறுவது, செட்டிநாடு ஹோட்டலின் வெளியே நின்றே உணவுவகைகளின் பெயர்களைக் கூறுவது, ஒருவரின் உடல் மணத்தை அந்தரங்கமாக அறிவது என நிறையவே கூறலாம். உங்கள் மூக்கு வாழ்க்கைக்கு முக்கியம். அதன் வழியாகவே நாம் உணவு வகளைஅறிகிறோம். உண்கிறோம். மூக்கு செயல்படாதபோது உங்கள் வாழ்க்கை தேங்கி நின்றுவிடும்.
அடிக்கடி உங்களுக்குத் தும்மல் வருகிறதா? நீங்கள் உள்ள இடத்தில் தூசிகள் அதிகமாக இருக்கிறது. அது உங்கள் உடலில் நுழைய முயல்கிறது என்று அர்த்தம். அதைத்தடுக்கவே மூக்கில் திரவம் சுரக்கிறது. அதை நாம் சளி என்கிறோம். இதுவே மூக்கின் வழியாக உடலில் புகும் கிருமிகளை தடுக்க முயல்கின்றன.
நாக்கு...உண்மைகளைப் பேசுமா?
அரசுக்கு எதிராக கேட்ட உமர் காலித் பிணை கூட ஓராண்டுக்கு பிறகுதான் கேட்க முடியும் என நீதித்துறை சங்கிகளால் மிரட்டப்படுகிறார். அவர் செய்த தவறு, அரசைக் கேள்வி கேட்டதுதான். அதுவும் ஓர் இந்து அரசை, இரண்டாம் நிலையிலுள்ள முஸ்லீம் இளைஞன் எப்படி கேள்வி கேட்கலாம். எனவே, அந்த இளைஞர் விசாரணையின்றி சிறையில் அடைக்கபட்டுள்ளார். ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டன. காவல்துறை நிநானமாக வழக்கை பதிவு செய்துகொண்டே இருக்கிறது. இந்தியா போன்ற மதவாநாடு... நாக்கு அதிலிருந்து வரும் உண்மைகளை முற்றாக மறுக்கிறது.
நாக்கில் பத்தாயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
நாக்கில் எச்சில் சுரப்பது, உணவுகளை எளிதாக மென்று விழுங்கவே.எச்சில் இயல்பாக சுரக்காதபோது, உணவுகளை மென்று தின்பது கடினமாக இருக்கும்.
நாக்கின் கீழே அதை இழுத்து பிடித்து கட்டுப்பாடு செய்யும் ஒரு சதை அமைப்பு உண்டு. அதன் பெயர் ஃபிரெனலம். உணவுகளை சாப்பிடும்போது நாக்கை கூட விழுங்கிவிட வாய்ப்புள்ளது. அதை தடுப்பதே இந்த உறுப்பின் இயல்பு.
நன்றி
டிகே புக்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக