இடுகைகள்

தேர்தல் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!

படம்
                  ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும் ! ப . சிதம்பரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி , 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது . கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன . இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது . அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம் . உணவு , பாதுகாப்பு , வேலை , வீடு , சுகாதாரம் , கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும் . உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு , தானியங்கள் , பால் , காய்கறிகள் , மீன்களை உற்பத்தி செய்கிறது . அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது . ஆனால் அப்படி கிடைக்கவில்லை . 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர் . இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது . 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது . 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து

ஊரக உள்ளாட்சிகளுக்கு மரியாதை! - சாதனைகளுக்கு விருது!

படம்
உள்ளாட்சிக்கு மரியாதை! மக்களாட்சியின் மணிமகுடமாக திகழ்பவை ஊராட்சி அமைப்புகள். இவையே கிராமங்களை சுதந்திரமாக செயல்பட வைக்க உதவுகின்றன. கிராம சபைகள் கூடி எடுக்கும் தீர்மானத்தை நீதிமன்ற உத்தரவுகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அந்தளவு ஆற்றல் வாய்ந்த முடிவுகளை எடுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகளுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை கவனிக்கிறது. 2011-12 ஆம் ஆண்டு முதலாக இத்துறை மிகச்சிறந்த செயற்பாடுகளைக் கொண்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்குவிக்கிறது. அதில் முக்கியமான விருதுகளைப் பார்ப்போம்.  சிறந்த முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு, தீன்தயாள் உபாத்யாய பஞ்சாயத் சகாத்கிகாரன் புரஸ்கார் விருது ( Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar (DDUPSP)) வழங்கப்படுகிறது. இந்த விருது கிராமம், நகரம், பெருநகரம் சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. சாலை, குடிநீர், சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, பட்டியலினத்தோர்

2019 தேர்தலில் பெண் எம்.பிக்கள் சாதித்தது எப்படி?

படம்
ரம்யா ஹரிதாஸ்  32 வயதில் எம்.பியாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பாக வென்றவர் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவதன் வழியாக மக்களை அணுகினார். கேரளாவிலிருந்து நாடாளுமன்றம் செல்லும் பழங்குடி இன எம்.பி இவரே. இதற்கு 48 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் பல சொதப்பல் பிளான்களை இந்த தேர்தலில் செய்தாலும், செய்த உருப்படியான விஷயம் நிறைய பெண் வேட்பாளர்களை தொகுதிகளில் நிறுத்த முயற்சித்த துதான். வென்ற பெண் வேட்பாளர்களில் ரம்யா ஹரிதாசும் ஒருவர். அம்மா, தையல் கலைஞர், அப்பா தினக்கூலி செய்துவருகிறவர். 2011 ஆம் ஆண்டு ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவர், தற்போது எம்.பியாகி உள்ளார். இதற்கு முன்பு பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டிருக்கிறார். தேர்தல் செலவுகளுக்கு க்ரௌடு ஃபண்டிங் மூலம் பத்து லட்சம் நிதிதிரட்டி செலவு செய்த தைரியம் பாராட்டத்தக்கது. அம்மா மகிளா காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்றாலும் திறமை மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறார் ரம்யா. கேரளாவின் ஒரே பெண் எம்.பி இவர்தான். மக்களின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்காக பாடுபடுவேன் என்று கூ

ஸ்பெயின் தேர்தல் 2019: என்ன மாற்றம் எதிர்பார்க்கலாம்?

படம்
ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் கட்சி 126 சீட்டுகள் வென்று சாதனை செய்துள்ளது. ஆட்சி அமைக்க 176 சீட்டுகள் தேவை என்பதால் சோசலிஸ்ட் கட்சி பிறகட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. மத்திய வலதுசாரி கட்சி மிக மோசமான சரிவைச் சந்தித்து 66 சீட்டுகளை வென்றுள்ளது. தேசியவாத கட்சி வாக்ஸ் 24 சீட்டுகளை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் ஊக்கத்துடன் செயல்பட்டு வந்த கட்சி சோசலிஸ்ட் கட்சிதான். ஆட்சியிலிருந்து கட்சி ஊழலால் தன் ஆதரவை இழந்தது. இதன்விளைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தோல்வி காண தேர்தல் நடத்தப்பட முடிவானது.  பசுமை திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி தீட்டியுள்ளது. 2050 க்குள் 90 சதவீத கார்பன் அளவைக் குறைப்பது. 2040 க்குள் இயற்கை வாயு வண்டிகளை அதிகரிப்பது, பிற வாகனங்களின் பதிவுகளை குறைப்பது. கரிம வாயுப்பொருட்களுக்கான அரசு மானியத்தை வெட்டுவது ஆகியவற்றை கட்சி முன்மொழிந்து செயல்பட உள்ளது. சோசலிஸ்ட் கட்சித் தலைவர் சான்செஸை, பொடேமோஸ் கட்சி தலைவர் பாப்லோ இக்லெசியாஸ் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

படம்
இஸ்ரேலின் நீண்டகால அதிபர்! வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார். பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர். நன்றி: டைம் இதழ்

வந்தே மாதரமா? வந்தே ஏமாத்துறோம்! - தேர்தல் 2019

படம்
தேர்தல் நாளில் என்ன செய்யலாம்? தேர்தலில் நேராக வாக்காளர் அட்டையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென பள்ளிக்குச் சென்று ஓட்டு போட்டுவிட்டு வந்து டிவி பார்ப்பது புத்திசாலித்தனமல்ல. தேர்தல் தொடர்பான சில சிக்கல்களை சந்தித்தால் அதனை எப்படி சமாளித்து தீர்வு காண்பது என்பதையும் யோசிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  49(P) சர்க்கார் விஜய் நமக்கு இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தி ஒருவிரல் புரட்சி செய்தார் இல்லையா? அதேதான். நீங்கள் துபாய், அமெரிக்கா ஏன் பக்கத்து ஊரிலிருந்து கூட உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொண்ட பள்ளிக்கு வருகிறீர்கள். உள்ளே நுழைந்து சோதிக்கும்போதுதான் தெரிகிறது. உங்கள் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டு ஓடிவிட்டனர். என்ன செய்வீர்கள்.  நீங்கள்தான் குறிப்பிட்ட நபர் என புகைப்படம், ச்சீ அதைப் பார்த்தால் நம் குடும்பத்தினரே நம்ப மாட்டார்கள். எனவே பிற அடையாள ஆவணங்களை கொட்டாவி விடும் ஆபீசரை ஆறுதல் படுத்தி காட்டினால் 49 பி சட்டப்படி காகிதம் ஒன்றைக் கொடுப்பார்கள். அதில் உங்கள் ஓட்டைப் பதிவு செய்து இந்தியக் குடியரசின் மகுடம் கீழே  விழாமல் காப்பாற்றிவிட்டு நெட்ஃபிளிக்ஸில் இணையலாம்.  1

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்

படம்
தி எகனாமிஸ்ட் தேர்தல் 2019 பாஜக, நமோ டிவி, டிவி 9 பாரத் வர்ஷ் என பல்வேறு ஊடகங்களின் பலம் கொண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ராகுல், வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி களமிறங்குகிறார். இதில் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை ராகுல் அறிவித்தார். NYAY எனப்படும் இத்திட்டத்தை மோடி குழுவினர், மறைக்க என்னென்னவோ முயற்சித்தும் முடியவில்லை. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. பாஜக, அரசுக்கு நிகராக பல்வேறு அன்பளிப்பு ரக அறிவிப்புகள் இதிலும் உண்டு. புதியவை என்ன? தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை உருவாக்கம். அரசு தேர்வுகளுக்கான கட்டணம் நீக்கப்படும். தொழில்துறையினருக்கு அனுசரணையான வகையில் அரசு செயல்படும். மூன்று ஆண்டுகளுக்கு அரசு, தொழில் நிறுவனங்களின் நடவடிக்கையில் தலையிடாது என்ற ராகுலின் அறிவிப்பை பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். குறுந்தொழில்துறைக்கு வருமான வரிவிலக்கு உண்டு. அனைவருக்கும் வீடு என்பதில் நகர்ப்புற ஏழைகளும் இணைக்கப்படுவர்.

இந்திய தேர்தல் 2019: கறுப்பு பணத்தை ஒழிப்பது எப்படி?

படம்
இநியூஸ்ரூம்/கறுப்பு பணம் தேர்தலில் கறுப்பு பணம்! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போதும், இடைத்தேர்தலின் போதும் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்ற புகாரை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விவகாரத்தில் தொழில்நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. ஆனாலும் இதன் மீது அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி இவ்வகையில் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் தேவை என்று கூறின. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் பத்திரங்களையே வெளியிட்டு கல்லா கட்டிவிட்டது. இதில் முதலீடு செய்பவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிப்படையாக பேசப்படாமல் உள்ளது இதனை தீவிரமான பிரச்னையாக்குகிறது.. இன்று கட்சிகள் பெறும் 70 சதவீத பணம் யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் வந்து சேருகிற பணம். ஆனால் இந்த பணம் எங்கிருந்து வருகிறது என சட்டத்திற்கு தெரியாவிட்டாலும், மக்களுக்கு ஏறத்தாழ தெரிந்துவிட்டது போலத்தான். ஆனால் அரசு வெளிப்படையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறினாலும் அதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதற்கு என்ன

தேர்தல் வீதி 2019

படம்
kerala kaumudi தேர்தல் வீதி பலரும் இந்த தேர்தலில் ஆளும் கட்சி தோற்று மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும் என நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பிருக்கிறதா? 1977 -2002 காலத்தில் அரசுகள்(70%) பல கலைந்து போயின. காரணம், அரசுகளின் செயலின்மை, வாக்குறுதிகள் நிறைவேற்றாமை என பல காரணங்கள் அதற்கு உண்டு. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக நிலைமை மாறி வருகிறது. கோபமாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த வாக்காளர்கள் இன்று முதிர்ச்சியடைந்தவர்களாக மாறியுள்ளனர். இளைய வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று பதவிகளை அனுபவித்து வரும் எம்பிக்களில் பலர், இந்திய வாக்காளர்களின் தோராய வயதைவிட அதிக வயது கொண்டவர்கள். இந்தியாவில் தற்போது 59 சதவீதம் இளைஞர்கள்(25-40) உள்ளனர். ஆனால் இதே வயதில் உள்ள எம்பிக்களின் வயது 15 சதவீதம்தான். மீது 85 சதவீத எம்பிக்கள் வெவ்வேறு வயதுப் பிரிவைக் கொண்டவர்கள். ஆனால் இதனால் வாக்காளர்களிடையே, வேட்பாளர்களிடையே பெரும் இடைவெளி உள்ளது. பெண் வாக்காளர்கள் தேர்தலில் பெண்கள் பங்கேற்கும் அளவு அதிகரித்து வருகிறது. இது அடுத்த மக்களவைத் தேர்தலில் மேலும் அதிகரிக்கும். வரலாற்றுச் சா

பெண்களை உயர்த்தும் கட்சிகள் எவை?

படம்
indianexpress பணிகளைச் செய்வதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள்.  தேர்தலில் கட்சிகள் பெண்களை உயர்த்துவது பற்றி வாய்கிழிய பேசினாலும், செயல்பாடு என வரும்போது அந்த வாக்குறுதியை மிக கவனமாக மறந்துவிடுவார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடும் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அதெல்லாம் விடுங்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது அதில் பெண்களுக்கான இடம் உண்டா? இதில் முதலிடத்தில் நிற்பது மேற்கு வங்கத்தின் தீதிதான். மம்தா பானர்ஜி, தன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகளின் சீட்டில் 40 சதவீதத்தை பெண்களுக்காக அளித்துவிட்டார். அடுத்து ஒடிசாவின் பிஜூ பட்நாயக். தேர்தலில் மத்திய அரசு அளிக்கத்தவறிய 33 சதவீத இடங்களை பெண்களுக்கு அளித்து கௌரவம் சேர்த்திருக்கிறார்.  பெண்களுக்கு இடமில்லை! 7 தேசியக்கட்சிகள், 51 மாநிலக்கட்சிகள் உள்ள நாட்டில் பெண்களுக்கு இது எப்படி போதுமானதாக அமையும் சொல்லுங்கள்? இது குறித்த சர்வே ஒன்றை செய்தபோது 1996 - 2014 வரையிலான தேர்தல்களில் பெண்களுக்கான இடங்கள் பத்து சதவீதத்தைக்கூட தாண்டவில்லை. உள்ளூர் தேர்தல்களில் மட்டும் விதிவிலக்காக பத்து சதவீதத்தை பெண்கள் தாண்டியுள்ளனர். இதில் காங்

வாக்களிப்பதை அதிகரிக்க என்ன செய்யலாம்?

படம்
வாக்களிப்பதை அதிகரிக்க பல்வேறு யோசனைகளை டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. அதில் சில., இடம்பெயர்ந்த தொழிலாளர் என்றாலும் அவர் இருக்கும் சட்டசபை, நாடாளுமன்றத் தொகுதியில் தன் பெயரை இணைத்துக்கொண்டு வாக்களிக்கலாம். அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்யலாம். அஞ்சள்,வாக்களிப்பதற்காக பதிலி ஒருவர், இணைய வாக்கு ஆகியவற்றை செயல்படுத்த தேர்தல் ஆணையத்தை கோரலாம். வேலைவாய்ப்புக்காக அவ்வப்போது மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களை அட்டவணைப்படுத்தலாம்.  இதன் மற்றொரு சிந்தனையாக, வெளி மாநில தொழிலாளிகளுக்கான தகவல் தளத்தை உருவாக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைத்தால் முடிந்தது. ஓட்டுநர் உரிமத்தை, தொலைபேசி எண்ணை, பான் எண்ணை, வங்கி எண்ணை ஏன் வாடகைக்கு இருக்கும் வீட்டு எண்ணைக்கூட இணைத்திருக்கிறோம். கூடுதலாக இதையும் இணைத்தால் ஒன்றும் கெட்டுப்போகாது. பல்வேறு மொழிகளைக் கொண்ட கால் சென்டரை திறந்து தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அந்நிய மாநிலங்களிலும் வழங்கலாம். விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அரசுவிதி 20 படி, தொழிலாளர்கள் தாங

வாக்களிப்பது இங்கு எளிது

படம்
தேர்தல் என்பது முன்னர் போல கிடையாது. நேராக பள்ளிக்கு வந்து கியூவில் நின்று இந்தியாவின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டு ஓட்டு ஏமாறுவது தற்போது மாறிவருகிறது. சீட்டுகள் போய் வாக்கு எந்திரங்கள் வந்தது போலவே வாக்களிப்பதும் மாறிவருகிறது பிற நாடுகள் எப்படி? அமெரிக்கா அமெரிக்காவில் வாக்காளர்கள் தேர்தல் நாளில் அங்கு இருக்க முடியாத சூழல் என்றால் அதற்கென விண்ணப்பித்து முன்னதாகவே விண்ணப்பிக்க முடியும். ஆனாலும் பனிரெண்டு மாநிலங்கள் இதனை அனுமதிப்பதில்லை. 28 மாநிலங்களில் தேர்தல் அன்று வரமுடியாதவருக்கு பதிலாக அவரின் அனுமதி பெற்ற மற்றொருவர் வாக்களிக்கலாம். ஒரேகான், வாஷிங்டன், கொலராடோ ஆகிய மாநிலங்களில் மின்னஞ்சல் வழியாக வாக்களிக்க முடியும். இங்கிலாந்து இங்கிலாந்தில் வாக்களிக்க விரும்பும் அந்நாட்டு குடிமகன், அஞ்சல் வாக்கை செலுத்த முடியும். சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏன் வாக்களிக்க முடியாது என விளக்கம் தரச்சொல்லி அரசு கேட்கும். ராணுவம் அல்லது வேலை என தேர்தல் அன்று இங்கிலாந்தில், வேல்ஸில், ஸ்காட்லாந்தில் இருக்கவே முடியாது என்றால் அதற்கான அனுமதியைப் பெற்றால் உங்கள் வாக்கை உங்களுக்கு பதில

வேலை முக்கியமா? தேர்தல் முக்கியமா?

படம்
தேர்தல் வந்துவிட்டது. மோடி அதற்காக தமிழர்களுக்கு முன்னதாகவே பொங்கல் வாழ்த்து சொல்லிவிட்டார். ஆனால் இப்போது புதிய பிரச்னை தேர்தல் ஆணையத்துக்கு முளைத்திருக்கிறது. அது வேலைக்காக இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களை எப்படி ஓட்டு போட வைப்பது என்பதுதான். 2001ஆம் ஆண்டு சென்சஸ்படி 33 மில்லியன் மக்கள்(ஒரு மில்லியன் = பத்து லட்சம்) 8.1 சதவீதம் தொழிலாளர்கள் பொருளாதார காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. இதில் எண்பது சதவிகிதத்தினர் ஆண்கள். தற்போது இந்த எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த வாக்காளர்களின் அளவு 29 சதவிகிதம் எனுமளவு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011 சென்சஸ்படி 482 மில்லியன் அளவிலான மக்களின் எண்ணிக்கை தற்போது 500 மில்லியனுக்கும் மேல்(2016) அதிகரித்துள்ளது. இது 20 சதவிகிதத்திற்கு அதிகமான வளர்ச்சி. டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே பெரும்பாலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உ.பி, ம.பி, பீகார் தொழிலாளர்கள் மேற்சொன்ன மாநிலங்களில் அதிகம் வேலை செய்கின்றனர். கொல்கத்தாவில் வேலை செய்பவர்களில் ஜார்க்கண்ட், உ.பி. ஒடிஷாவைச் சேர்

மோடிக்கு எது பலம்? பிளஸ் மைனஸ் பிளஸ் 2

படம்
பிளஸ் மைனஸ் பிளஸ்! ஆயுஷ்மான் பாரத், கிராமப்புற வீடு வழங்கும் திட்டம் ஆகியவை மோடியின் பெயர் சொல்லும் திட்டங்கள். ஆயுஷ்மான் பாரத்தில் பத்து கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவப்பாதுகாப்பு உண்டு. கடந்த 4 ஆண்டுகளில் 1.24 கோடி வீடுகள் கிராமப்புற வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. சௌபாக்யா திட்டத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் மின்சார வசதி என்ற லட்சியத்தில் செயல்பட்டு வருகிறது. டிச.31, 2018 என்பது இதன் டெட்லைன். முத்ரா கடனில் வாராக்கடன் விவகாரத்தை மறந்துவிட்டு பார்க்கலாம். பனிரெண்டு கோடி மக்களுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. பயன்பெற்ற 75% பெண்களில் 55 சதவிகிதம் பேர் எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள்.  மொத்தமாக 18% பேர் எஸ்சி, 5% பேர் எஸ்டி என பயன்படுத்தியுள்ளனர். இந்து மக்களுக்கான அரசு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது மோடியின் வெற்றி ரகசியம். 4.87 கோடிப்பேர் ஃபாசல் பீமா யோஜனா எனும் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். ஜன்தன் யோஜனா எனும் ஜீரோ இருப்புத்தொகை கணக்கை 31 கோடிப் பேர் தொடங்க

மோடி செய்தது என்ன? - மைனஸ் பிளஸ் மைனஸ்? 1

படம்
மோடியின் ஃபிளாப் பணமதிப்பு நீக்கம் மோடி இன்னும் கசப்பு மருந்து எனும் வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தினாலும் வரலாற்றில் மறக்கமுடியாத மக்களின் தோல்வியாக இது பதிந்துவிட்டது. கருப்பு பணம் என புருடா விட்டு பணத்தை திரும்ப வங்கிக்கு கொண்டு சேர்த்த 99.3% பணம் மோடியின் குட்டை உடைத்து அவமானத்தை, கறையை ஏற்படுத்திய யோசனை. எரிபொருள் விலையுயர்வு பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம் என்றாலும் அதனை முறைப்படுத்தக்கூட யோசிக்காதது மோடிக்கு பின்னடைவு. ரூபாயில் ஏற்றி பைசாவில் குறைக்கும் மோடினாமிக்ஸ் தந்திரத்தை சரவணா ஸ்டோர் அதிபர் கூட தள்ளுபடிக்கு பயன்படுத்தவில்லை என்பது நகைமுரண். ஜிஎஸ்டி எல்எஸ்டி ஒருவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட ஜிஎஸ்டி அதிகம் பாதித்துவிட்டது. கடலைமிட்டாய்க்கு ஒருவரி, பிஸ்கட்டிற்கு ஒரு வரி என விதித்து கடை ஓனரை மட்டுமல்ல வாங்கும் மக்களையும் தாக்கி வீழ்த்தி புலம்பவைத்துவிட்டது. சிறுகுறு தொழில்துறை மூடப்பட்டது ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்ட பின் என்பது கசக்கும் உண்மை. வேலை கிடையாது பொருளாதாரம் மேலே ஏறினாலும் வேலைவாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம்

தேர்தல் நிதி பற்றிய அலசல்! - 2019

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் தேர்தல் செலவு 2014 ஆம் ஆண்டு மக்களவைக்கு அரசியல் கட்சிகள் செலவிட்ட தொகை ரூ. 35 ஆயிரம் கோடி . 2019 ஆம் ஆண்டு இத்தொகை ரூ.60 ஆயிரம் கோடியாக எகிறும் என கணக்கிடப்பட்டு உள்ளது. தற்போது மக்களவை தேர்தலில் செலவிடப்படவுள்ள 10 ஆயிரம் கோடி என்பது 2013 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் மாநில சட்டசபை தேர்தலுக்கு செலவான தொகையை விட இரு மடங்கு அதிகம். 2012-2016 காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளின் நதிமூலம் தேடிப்பார்த்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 89 சதவிகித நன்கொடைகளை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் ஆறு தேசிய கட்சிகள் பெற்ற 46% நன்கொடை, பெயர் குறிப்பிட விரும்பாத நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை. நிதி கிடைப்பது எப்படி? தன்னார்வ நிதி ஆதாரங்களே அதிகம். அது தவிர்த்து மக்களிடம் திரட்டும் நிதி, கூப்பன்களை விற்பது, கட்சி நூல்கள், உறுப்பினர் அட்டை, கார்ப்பரேட் நன்கொடைகள் நிதியை அம்பாரமாய் சேர்க்க உதவுகின்றன.  கட்சிகள் ரூ.2 ஆயிரத்திற்கு மேலான நன்கொடைகளை ரொக்கமாக பெறமுடியாது. இதற்கு மேல் நிதியளிப்பவர்களை பற்றிய விவரங்களை கட்சிகள் பெறவேண்டும்