காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ஒரு அலசல்




Image result for rahul gandhi illustration
தி எகனாமிஸ்ட்





தேர்தல் 2019


பாஜக, நமோ டிவி, டிவி 9 பாரத் வர்ஷ் என பல்வேறு ஊடகங்களின் பலம் கொண்டு தேர்தலை சந்திக்கவிருக்கிறது. ராகுல், வேலைவாய்ப்புகள், பெண்களுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பேசி களமிறங்குகிறார். இதில் மோடியின் 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை உடைக்கும் விதமாக, குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை ராகுல் அறிவித்தார். NYAY எனப்படும் இத்திட்டத்தை மோடி குழுவினர், மறைக்க என்னென்னவோ முயற்சித்தும் முடியவில்லை.


தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டு விட்டது. பாஜக, அரசுக்கு நிகராக பல்வேறு அன்பளிப்பு ரக அறிவிப்புகள் இதிலும் உண்டு.


புதியவை என்ன?

தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை உருவாக்கம்.


அரசு தேர்வுகளுக்கான கட்டணம் நீக்கப்படும்.

தொழில்துறையினருக்கு அனுசரணையான வகையில் அரசு செயல்படும். மூன்று ஆண்டுகளுக்கு அரசு, தொழில் நிறுவனங்களின் நடவடிக்கையில் தலையிடாது என்ற ராகுலின் அறிவிப்பை பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.


குறுந்தொழில்துறைக்கு வருமான வரிவிலக்கு உண்டு.

அனைவருக்கும் வீடு என்பதில் நகர்ப்புற ஏழைகளும் இணைக்கப்படுவர். அதோடு காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மேம்படுத்தப்படவிருக்கிறது.

எங்கும் பயன்படுத்த முடியும் ரேஷன் கார்டு அமலாகும்.

கடனுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு வங்கிகள் தொடங்கப்படும்.

வெறுப்பு வாதம் மற்றும் கும்பல் படுகொலை ஆகியவற்றுக்கு எதிராக சட்டம் இயற்றப்படும்.


பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடிகளுக்கு வழங்கப்படும்.


மரம் சாராத தொழில்துறைக்கு கமிஷன் அமைக்கப்படும்.


கல்விக்கு...

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் செலவழிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயம் என்பதோடு இலவசமும் கூட. பள்ளிக்கல்வி மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்படும்.

பெண்களுக்கு....


பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அமலாகும். பெண்களுக்கான காப்பகங்கள், கழிவறைகள் அமைக்கப்படுவதோடு, பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்த ஒரு ஊழியர் நியமிக்கப்படுவார்.

தேர்தல்...

தேர்தலில் சுயேச்சையாக ஏழை ஒருவர் போட்டியிட உதவும்படி தேர்தல் நிதிக்கு உத்தரவாதம் தரும் நிதியகம் அமைக்கப்படும்.


விவசாயிகளுக்கு....

விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் அமைக்கப்படும். கடன்களை கட்ட முடியாது என்றாலும் அது கிரிமினல் குற்றமாக கருதப்படமாட்டாது.

தூக்கியெறியப்படுகிறது...

தேர்தல் பத்திரங்கள் கைவிடப்படுகிறது.

நிதி ஆயோக் அமைப்பு கைவிடப்பட்டு, திட்டக்குழு முறை உருவாக்கப்படும்.

குடியுரிமை மசோதா வாபஸ் பெறப்படும்.

நீட் தேர்வு நீக்கப்படும்.

மாற்றுப்பாலினத்தவருக்கான மசோதா திரும்ப பெறப்படும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும்.


அறிக்கையை தலைமையேற்று வடிவமைத்தவர் ப.சிதம்பரம்.  இவரோடு எம்பி ராஜிவ் கௌடா, ஜெய்ராம் ரமேஷ், பிரவீன் சக்ரவர்த்தி, ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சிதம்பரம்(பொருளாதார கொள்கை), ஆனந்த சர்மா (வெளிநாட்டு உறவுகள்), சல்மான் குர்ஷித் (சிறுபான்மையினர்), பாலச்ச்ந்திர முங்கேக்கிரர் (கல்வி), குமார் செல்ஜா (நகரமயமாதல்)


நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா

தமிழில்: பொன்னையன் சேகர்


பிரபலமான இடுகைகள்