மினிமலிச வாழ்க்கை - இது அமெரிக்க கருத்து








ஹாஸ்டல் வாழ்க்கைதான் செட் ஆகும்!


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அப்படித்தான் வேலை பார்த்து வருகின்றனர்.  காரணம், குறைந்து வரும் சேமிப்பு, கடன் தொல்லைகள்தான் காரணம்.

அமெரிக்காவில் கல்வி கற்கவும் மாணவர்கள் வங்கியில் கடன் வாங்கித் தீரவேண்டும். இதன் காரணமாக, தனி வீடு எனும் கௌரவத்தில் மாட்டினால் டவுசர் கிழிந்துவிடும். பின்னே இஎம்ஐ கட்டுவதா? அல்லது நிம்மதியாக வாழ்வதா?

எனவே அமெரிக்கர்கள் இப்போது ஒன்றாக வேலை செய்யும் கோ வொர்க்கிங் ஆபீஸ் போல, ஒன்றாக தங்கும் ஹாஸ்டல்களில் தங்கத் தொடங்கியுள்ளனர். இதனை பாட்ஷேர் என்று அழைக்கின்றனர்.

என்ன ஸ்பெஷல்? காலேஜ் படிக்கும்போது அல்லது ஸ்கூல் படிக்கும்போது ஹாஸ்டலில் தங்கியிருப்பீர்கள். குறைந்தபட்சம் அந்த வாழ்க்கையை நண்பர்கள் மூலமாவது அறிந்திருப்பீர்கள். செலவு குறைவாக இருக்கும். பாத்ரூம் முதல் பத்து ரூபாய் பெப்சோடன்ட் பேஸ்ட் வரை ஷேர் செய்து சட்டையை கடன் வாங்கி கெத்து காமித்து நண்பேன்டா சொல்லியிருப்பீர்கள். அதேதான். அமெரிக்க இளஸ் மனஸ் முழுக்க மெல்ல செலவு குறைக்கும் பட்ஜெட் திட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மினிமலிச வாழ்க்கை வாழ்வதற்கான ஏக்கம் உள்ளவர்கள் இதில் இணைந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் பெண்கள் வந்தால் எல்லாமே மாறிடுமே!


படம் மற்றும் செய்தி - நன்றி: ஃப்யூச்சரிசம்