இமெயிலை சீனர்கள் வெறுப்பது ஏன்?
இமெயிலை வெறுக்கும் சீனர்கள்!
வேறென்ன? ரேடியோ காலத்தில் டிவி வந்தப்பிறகு அதைத்தானே உலகமே விரும்பியது அதே கதைதான். சீனாவில் பெரும்பாலும் வீசாட் ஆப்பை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக இந்தியாவில் சில ஆப்களை பயன்படுத்த ஃபேஸ்புக் ஐடி கொடுக்காமல் இமெயில் கொடுத்தால், ஓல்டு ஸ்கூலா என்று கேள்வி வரும். வேறு வழியில்லை. நிலைமை அப்படி...
அமெரிக்காவில் பார்த்தால் வேலை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு இரண்டுக்குமாக அவர்கள் சுவரே எழுப்பியிருக்கிறார்கள். இந்தியர்கள் அப்படி நினைப்பதில்லை.
சீனர்களும்கூடத்தான். இன்று ஆபீஸ், வீடு என இரண்டையும் வீசாட், க்யூக்யூ ஆப் வழியாக கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாளை இதுவும் எளிமையான தொடர்புக்கு மாறலாம். இப்போது இது.
1999 ஆம் ஆண்டு சீனாவில் டெஸ்க்டாப் மெசேஜ் ஆப்பாக இருந்த ஐசிக்யூவை க்யூக்யூ என்ற ஆப்பாக டென்சென்ட் நிறுவனம் மாற்றியது. இன்று டென்சென்ட் சீனாவில் இரண்டாவது பெரிய டெக் நிறுவனமாக மாறி நிற்கிறது.
802 மில்லியன் பேர் சீனாவில் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இமெயிலை ப் பயன்படுத்த சீனாவில் உள்ள தடை என்பது மொழிதான். ஆங்கிலம் பெரிய சிக்கல். இதற்கு பதிலாக வீசாட்டை பயன்படுத்துகின்றனர். புகைப்படம், கோப்பு, பாட்டு என்ன அனுப்பவேண்டும் அத்தனையும் அனுப்பலாம். என்ன அரசாங்கத்தின் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு.
இன்று சீனாவில் 87.7 சதவீதம் வீசாட்டையும், 56.5 சதவீதம் பேர் சாதாரண செய்தி, ஃபேக்ஸ் சேவைகளையும் மீதி 22 சதவீதம் பேர் இமெயிலையும் பயன்படுத்துகின்றனர்.
சீனாவில் வேலைநேரம் காலை 9 - இரவு 9 மணி வரை நீள்கிறது. இந்த வேலைநேரமும் இமெயிலுக்கு தேவையான நேரத்தை அளிப்பதில்லை. வீசாட் என்பது வசதியாக நான் நினைக்கவில்லை. இது எங்குமே ஈஸியாக கிடைக்கிறது என்கிறார் டெக் பணியாளரான ஆவோகி. இங்கு ஆறு வேலைநாட்கள் எச்சிலைத் தொட்டு தம்ப் வைத்தால்தான் வேலையில் தொடரமுடியும்.
அதேசமயம் வீசாட்டை ஒருவர் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்து வருவதை டெக் நிறுவனமான டென்சென்ட் ஆபத்தானதாக பார்க்கிறது.
படம் செய்தி - நன்றி: அபாகஸ்
9to5Mac