சீரியல் கொலைகாரர்களின் குணம்








சீரியல் கொலைகாரர்களின் குணங்கள்

உடனே இது அனைவருக்கும் பொருந்தாது என கூவாதீர்கள். பொதுவாக ஆராய்ச்சி, மற்றும் விசாரணை அடிப்படையில் இதனைக் கூறுகிறோம்.


சக்திசாலி நான்

பொதுவாக தான் செய்த மூர்க்கமான கொலைகள், பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சீரியல் கொலைகாரர்களை அடித்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அது ஒரு சந்தோஷம். தான் ஆற்றல் மிக்கவான இருக்கிறேன் என்பதை நீங்கள் கேள்வி கேட்பது உணர வைக்கிறது. எனவே அவர்கள் அதனை தீவிரமாக விரும்புகிறார்கள்.

சூழ்ச்சிவாதிகள்

வரலாற்றில் இது நடப்பதுண்டு. ராட்சசன் படத்தில் சில க்ளூக்களை வேண்டுமென்றே விட்டுச்செல்வது, மெல்ல கொலையின் தீவிர குளிரை எதிரிகளின் மனதில் செலுத்துவது, தவறான தகவல்களை கசியவிட்டு அலைய வைப்பது என்பதை சீரியல் கொலைகாரர்கள் செய்வார்கள். செய்தார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? அது அவர்களை முக்கியமானவர்களாக மாற்றுகிறது. அந்த விளையாட்டு அவர்களுக்கு பிடித்திருக்கிறது.


தற்பெருமை தவறு


சீரியல் கொலைகாரர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாதபடி ஸ்மார்ட்தான். ஆனால் வாய் அத்தனையையும் கெடுக்கும். யெஸ் சனி நாக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்த டிராவர் ஹார்டி என்பவர், எழுபதுகளில் இளம்பெண்களை போட்டுத்தள்ளி புகழ்பெற்றவர். ஆனால் தன் சகோவுடன் கொலைகளைப் பற்றி தற்பெருமை பேசி போலீசில் சிக்கிக்கொண்டார்.

சக மனிதர்கள்தான்

நாய் பிடித்துச்செல்லும் போது உங்களைப் பார்த்து சீரியல் கொலைகார ர்களால் புன்னகைக்க முடியும். அவர்களும் சமோசாவுக்கு சாஸ் கேட்பார்கள். அனைத்தும் இருந்தாலும் அவர்கள் மனதின் ஒரு பகுதி இருளாக இருக்கும். அதுதான் அவர்களை வேறுபடுத்துகிறது.

நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன்

ஆக்கம்: பொன்னையன் சேகர்