புத்தகமா? இபுக்கா எது பெஸ்ட்?






Image result for ebook or book


இபுக்குகளை விட காகித புத்தகங்களே சிறந்தவை.

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் இபுத்தகங்களை மட்டுமே டிவி, செல்போன் திரையைப் பார்ப்பது தவறு என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த அறிக்கை பீடியாட்டிரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

மிச்சிகன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர் டிஃபானி முன்சர், புத்தகங்களை படிப்பது குழந்தை மற்றும் சிறுவர்களின் மொழி, பேச்சு ஆகியவற்றை ஊக்குவித்து உறுதியாக்க உதவுகிறது. இது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் ஆதாரமாகிறது என்கிறார்.

அதேசமயம் இதனை எதிராக நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது. புத்தகங்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றாலும் குறிப்பிட்ட அளவுதானே வீட்டில் வைத்து படிக்க முடியும். இபுக் வந்தபின், லட்சக்கணக்கான நூல்களை டேப்லட்டில், கிண்டிலில் படிக்க முடிகிறதே என டெக்கி வாசகர்கள் கேள்வி எழுப்பலாம்.

ஒப்பீடு என்பது புத்தகங்களுக்கே சாதகமாகியுள்ளது. நடைமுறை எதார்த்தம் நம்மை இபுக்குகளை தேட வைக்கிறது என புரிந்துகொண்டு வாசியுங்கள்.


முன்சர் குழு, 37 பெற்றோர் - குழந்தைகளை ஆராய்ந்ததில்  இந்த உண்மையை அறிந்துள்ளனர். ஒரே கதையை மூன்றுவகை பிளாட்பார்ம் வழியாக கூறினர். நூலாக, இபுக்காக, இவையன்றி மற்றொரு முறையாக அனிமேஷனைப் பயன்படுத்தினர்.

இதில் குழந்தைகளின் ஆர்வம் நூலின் மீதுதான் இருந்தது. பெற்றோர் நூல்களைப் படிக்கும்போது குழந்தைகள் அதிலிருந்து நிறைய கேள்விகளைக் கேட்டனர். வனவிலங்கு கண்காட்சிக்கு சென்ற அனுபவத்தை பெற்றோர் பேசிக் கேட்கும் குழந்தைகள், அதிலிருந்து நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் ஆய்வுக்குழுவினர்.

நன்றி: பிரெய்ன்ஃபீட்

பட உதவி: Write of Passage - WordPress.com 

பிரபலமான இடுகைகள்