இங்கிலாந்தில் சூடு பறக்கும் சூழல் போராட்டம்!
இங்கிலாந்தில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமானது, அவர்கள் விடுமுறை தினத்தன்று போராடுவதும் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான்.
ஆனால் அதற்காகவெல்லாம் அரசு சும்மா இருக்குமா? 2025 ஆம் ஆண்டிற்குள் கார்பனைக் குறைக்கும் நிர்பந்தம் இருக்கும் அரசை மேலும் போராட்டம் நடத்தி நெருக்கடியில் தள்ளியதற்காக, சுமார் 570 பேர்களை அரசு கைது செய்துள்ளது.
இங்கிலாந்தின் ஹீத்ரு விமானநிலையத்தில் இளைஞர்கள் சூழல் தொடர்பான பாடல்களைப் பாடி போராடியதும் மக்களை உணர்ச்சிகரமாக போராட்டத்திற்கு அழைத்துள்ளது. போராட்டத்தில் அகாடமி அவார்டு வென்ற தாம்சன் என்ற நடிகையும் இணைந்துள்ளது போராட்டக்கார ர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பதிமூன்று முதல் பதினான்கு வரையிலான இளைஞர்கள் நாம்தான் பூமியின் கடைசி தலைமுறையா என்று கேள்வி கேட்டு வைத்த பேனர்கள் மக்களை போராட்டத்திற்கு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
என்னுடைய எதிர்காலம் பற்றிய பயத்தினால்தான் நான் போராட்டத்திற்கு வந்தேன். அதே பயம்தான் போராடுவதற்கான தைரியத்தையும் தந்தது என்று ராய்ட்டர் நிறுவனத்திடம் பேசிய இளைஞரான ஆஸ்கர் ஐடிலுக்கு வயது 17.
இதில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு மாசுபாட்டாளர்களின் தலைவன் என்ற பட்டத்தை சூட்டி இளைஞர்கள் போராடி வருகின்றனர். போலீஸ் அவர்களை அகற்ற முயலும்போது ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அங்கிருந்து நகராமல் போராடி வருகின்றனர்.
க்ரீன்பீஸ் அமைப்பு, இதனை ஆயில் மற்றும் பெட்ரோல் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் என்று குறிப்பிட்டுள்ளது. இவர்கள்தான் உலகின் வெப்பமயமாதலை அதிகரித்து வருகின்றனர் என்று இந்நிறுவனம் துணிச்சலாக குறிப்பிட்டு பேசியுள்ளது.
தி டைம்ஸ் ஆப் இந்தியா
படம்: பிபிசி