வலிக்காத சூப்பர் ஹீரோ- மர்த் ஹோ தர்த் நஹி ஹோத்தா
இந்துஸ்தான் டைம்ஸ் |
Mard Ko Dard Nahi Hota
இயக்கம்: வாசன் பாலாஒளிப்பதிவு: ஜே படேல்
இசை: கரன் குல்கர்னி, திபாஞ்சன் குஹா
சூப்பர் ஹீரோ எப்படி உருவாகிறார்கள் அதற்கு எல்லாம் எதிராக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மரபணு பிரச்னையால் உடலில் வலியில்லாத குறைபாடு( Congenital insensitivity to pain) கொண்ட குழந்தை பிறக்கிறது. யெஸ் நாயகன் சூர்யா. அடிபட்டு கைகால் முறிந்தாலும், பள்ளியில் பையன்கள் காம்பஸால் குத்தினாலும், அப்பா அறைந்தாலும் நோ டென்சன்! பீ ஹேப்பி. எந்த வலியும் கிடையாது.
டெக்கன் கிரானிக்கல் |
இப்படிப்பட்ட்ட குழந்தையை பள்ளிக்கு எங்கே அனுப்புவது? தாத்தா வீட்டிலேயே வைத்து அவரின் பிரச்னையை புரியவைத்து தண்ணீர் பாட்டிலை முதுகுடன் சேர்த்து கட்டுகிறார். வலியில்லாதது பிளஸ்தான். ஆனால் உடலில் நீர் சத்து குறைந்தால் சூர்யா மயங்கிவிடுவான் என்பது டாக்டரின் அட்வைஸ்.
இப்படி ஒரு ஹீரோ, தன் சிறுவயது தோழி, காதலி சுப்ரியாவுடன் சேர்ந்து தன் மானசீக குரு கராத்தே மேனின் மானம் காக்க போராடுவதுதான் கதை. படம் வெப்சீரிசாக வெளியிட்டிருக்கலாம். திரையரங்கில் பார்ப்பதற்கான சுவாரசியங்கள் கிடையாது. படத்தை நுணுக்கமாக கவனித்தால்தான் அவல நகைச்சுவை புரியும்.
ஹேன்ஸ் இந்தியா |
படம் க்ளைமேக்ஸில் தொடங்கி ஃபிளாஷ்பேக் சென்று பின் நிகழ்காலத்திற்கு வரும். இதிலேயே காதல், சோகம், கராத்தே மேனின் கதை என அத்தனையும் நிகழ்கிறது. அனைத்தும் டக்.டக்கென மாறுவதால் கவனமாக பார்க்க வேண்டும். நாயகன் தசானி, நாயகி ராதிகா மதன், கராத்தே மேன் & வில்லன் குல்ஷன் தேவய்யா பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். கராத்தே மேனாக குல்ஷன் ஒற்றைக் காலில் எப்படித்தான் நடித்தாரோ என வியக்க வைக்கிறார். கேமரா, இசை என அனைத்தும் படத்தினை உயர்த்தி பிடிக்கின்றன. புதுமுகங்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளின்றி படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.
உடல் குறைபாட்டை எடுத்துக்கொண்டு அதனை சமூகத்திற்கான பயன்படுத்தும் நாயகனின் அக்கறை, டெட்பூலை நினைவுபடுத்துகிறது. மேலும் இதனை நீங்கள் ஜாலியாக எடுத்துக்கொண்டு பார்க்கலாம். நாயகன் வில்லனை வீழ்த்த வேண்டும் எனவெல்லாம் நினைக்காதீர்கள். அவல நகைச்சுவைக்கான படம் இது.
டைம்ஸ் |
இப்படத்தின் இயக்குநர், தன்னால் எப்படி படத்தை காமெடியாக உருவாக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இசை, கேமிரா, நடனம், சண்டை பயிற்சிகள் அனைத்தும் செம தரம்.
முன்பின் பாயும் காட்சிகளைப் பொறுத்தால் ஜாலியான சினிமாவிற்கு கேரண்டி தரலாம்.
-கோமாளிமேடை டீம்