சைக்கோ கொலைகாரர்களின் உளவியல் என்ன?



crystalized bipolar disorder by Madradiohead


சைக்கோ கொலைகாரர்கள்

யார் இவர்கள்?


சைக்கோ கொலைகார ர்கள் நிச்சயம் யாரோ என்று கூற முடியாது. அப்படி ஒரு காலகட்டம் இது. உங்கள் அருகிலுள்ளவராக, ஏன் நீங்களே கூட இருக்கலாம். சிறுவயதில் ஏற்படும் ஆளுமை சார்ந்த குழப்பங்கள், சமூக புறக்கணிப்பு, மரபணு ரீதியான வன்முறைத் தூண்டல் ஆகியவையும் இதில் முக்கியமானவையாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.


அதற்காக செல்வ ராகவன் படத்தில் வருவது போலவே, பாலா படத்தில் டை அடித்துக்கொண்டு கழுத்து சங்கைக் கடிப்பவர்கள் போலவோ உளவியல் பாதிப்புள்ளவர்கள் இருக்க மாட்டார்கள். போ டை கட்டிக்கொண்டு பாந்தமாக பேசியபடியும் பிறரை ஈர்க்கும்படியும் கூட இருப்பார்கள். இப்படித்தான் இருப்பார்கள் என்று நான் இங்கு கூறுவது கூட பொய்தான். இதுவும் மாறும். நான் கூறுவது அனைத்தும் மருத்துவர்கள் தொகுத்தளித்த ஆய்வுகளின் அடிப்படையிலான உண்மைகளின் படி கூறுகிறேன்.

குணங்கள்


இவர்கள் எந்த பொறுப்பினையும் ஏற்பது சிரமம். எந்த தவறு ஏற்பட்டாலும் பிறர்தான் பொறுப்பு என்று சொல்லி கிளம்பிவிடுவார்கள். அதேசமயம் செய்யும் விஷயங்களில் கிடைக்கும் லாபம் தனக்குத்தான் என்பதில் மாறவே மாட்டார்கள். இவர்களுக்கு அறம் நூலைக் கொடுத்தாலும் என்ன விலை என்று பார்ப்பார்களே தவிர ஜெ. நூல் என படிப்பது சிரமம். பெரியளவில் எதற்கும் உணர்ச்சிவசப்படமாட்டார்கள்.

சமூகத்தின் விதிகள், கட்டுப்பாடு என்பதை ரோமம் அளவுக்கும் இவர்கள் மதிக்க மாட்டார்கள். இதனால்தான் அமெரிக்காவில் ஒரு சதவீத சைக்கோ கொலைகார ர்களால் 30 சதவீத வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக நான் கூறவில்லை. குற்ற ஆவணங்கள் கூறுகின்றன.


தகவல்: எஃப்பிஐ
படம்: பின்டிரெஸ்ட்