உயிர் பிழைத்த தேனீக்கள்!
பிரான்சில் நோட்ரே டாமே தேவாலயத்தில் தீவிபத்து நடைபெற்றது.அதில் அங்கிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேனீக்கள் தீ விபத்தில் மாட்டாமல் தப்பித்துள்ளதை உறுதி செய்துள்ளது பறவையியலாளர் குழு.
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நெருப்பு தேனீக்களை தீண்டவில்லை என்கிறார் நிக்கோலஸ் ஜீன்ட் என்ற தேனீவளர்ப்பாளர்.
அங்கு ஒரு கூட்டில் 60 ஆயிரம் தேனீக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் வாழ்ந்து வந்தன. சுவர், விட்டம் என அனைத்தும் தீயால் எரிந்து போனாலும் தேனீக்கள் பிரச்னையின்றி தப்பித்திருக்கின்றன.
நகரம் முழுக்க 700 தேனீ வளர்ப்பிடங்கள் உள்ளன. கதீட்ரலில் மூன்று இருந்தன. கதீட்ரல் விபத்தானது நிச்சயம் வருத்தமான செய்திதான். அதேசமயம், தேனீக்கள் உயிர் பிழைத்தது எனக்கு மகிழ்ச்சி என்கிறார் நிக்கோலஸ்.
நன்றி: கார்டியன்