மிச்சமுள்ள கம்யூனிச நாடுகள்!




Image result for communist
udemy-blog





மிஞ்சியுள்ள கம்யூனிச நாடுகள் எவை?

சோவியத் யூனியன் தொண்ணூறுகளில் உடைந்து நொறுங்கியது. ஆனால் கம்யூனிச பாதை உடனே மூடப்படவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், கம்யூனிசக் கருத்தில் நாட்டை வழிநடத்தினர். இதனால் மக்களுக்கு நல்லது நடந்ததா என்பது இங்கு முக்கியமல்ல. கருத்தியல் என்ன என்பது மட்டுமே இங்கு பேசப்படுகிறது.


சீனா

மாவோ, 1940 ஆம் ஆண்டு சீனாவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மக்கள் குடியரசு நாடாக சீனா மலர, முக்கியக் காரணம் இடதுசாரி கட்சி ஆகும். இடதுசாரிக் கட்சியின் ஆதிக்கத்தில் சீனா வளர்ந்து வர, சிவப்பு சீனா என்ற பெயர் கிடைத்தது.

அனைத்திலும் அரசின் கட்டற்ற தலையீடு உண்டு. 2004 ஆம் ஆண்டுதான் பொதுவுடைமை என்ற த த்துவத்தைக் கைவிட்டு தனிநபர் சொத்து என்ற வழிக்கு வரத்தொடங்கியது சீனா.


க்யூபா

உலகிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து அளிக்கும் நாடுகளில் க்யூபா முக்கியமானது. இந்நாட்டில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தில், பிடல் காஸ்ட்ரோ மற்றும் அவரது நண்பர்கள் வென்றனர். ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் நாடு என்பதால் அமெரிக்காவின் ஆயுள் எதிரியாக மாறியது க்யூபா. பல்வேறு வர்த்தக தடைகள், உள்நாட்டுக் கலகத்தை சந்தித்தாலும் இன்றும் கம்யூனிச கருத்தை அமல்படுத்து மக்கள் நலம் காத்து வருகிறது கம்யூனிச கட்சி. சீனா, பொலிவியா, வெனிசுலா ஆகிய நாடுகளும் இடதுசாரி அணியில் சேர்ந்துவிட்டன.

2008 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ க்யூப அதிபர் பதவியிலிருந்து விலகினார். ஒபாமா தன் ஆட்சிக்காலத்தில் க்யூபாவுடன் நெருங்கி வர முயற்சித்தார். இப்போது ட்ரம்ப், க்யூபாவுக்கு செல்லும் பயணங்களை பெரும்பாலும் தடை செய்துவிட்டார்.

லாவோஸ்

1975 ஆம் ஆண்டு லாவோஸ், ஜனநாயக குடியரசாக மலர்ந்தது. இந்நாட்டினை வியட்நாம், சோவியத் யூனியன் அங்கீகரித்தது. மன்னராட்சி நாடாக  இருந்து பின்னர் ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. ஒரே கட்சி முறையில் கம்யூனிச நாடாக உள்ளது. 1988 ஆம் ஆண்டு தனியார் சொத்துரிமையை ஆதரித்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு, உலக வணிகக் கழகத்தில் இணைந்தது.