ஸ்பெயின் தேர்தல் 2019: என்ன மாற்றம் எதிர்பார்க்கலாம்?





Image result for spain socialist party win




ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் கட்சி 126 சீட்டுகள் வென்று சாதனை செய்துள்ளது. ஆட்சி அமைக்க 176 சீட்டுகள் தேவை என்பதால் சோசலிஸ்ட் கட்சி பிறகட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

மத்திய வலதுசாரி கட்சி மிக மோசமான சரிவைச் சந்தித்து 66 சீட்டுகளை வென்றுள்ளது. தேசியவாத கட்சி வாக்ஸ் 24 சீட்டுகளை வென்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் ஊக்கத்துடன் செயல்பட்டு வந்த கட்சி சோசலிஸ்ட் கட்சிதான். ஆட்சியிலிருந்து கட்சி ஊழலால் தன் ஆதரவை இழந்தது. இதன்விளைவாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தோல்வி காண தேர்தல் நடத்தப்பட முடிவானது. பசுமை திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி தீட்டியுள்ளது.


2050 க்குள் 90 சதவீத கார்பன் அளவைக் குறைப்பது.

2040 க்குள் இயற்கை வாயு வண்டிகளை அதிகரிப்பது, பிற வாகனங்களின் பதிவுகளை குறைப்பது.


கரிம வாயுப்பொருட்களுக்கான அரசு மானியத்தை வெட்டுவது ஆகியவற்றை கட்சி முன்மொழிந்து செயல்பட உள்ளது. சோசலிஸ்ட் கட்சித் தலைவர் சான்செஸை, பொடேமோஸ் கட்சி தலைவர் பாப்லோ இக்லெசியாஸ் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.





பிரபலமான இடுகைகள்