யூட்யூபில் கலக்கும் ஜீனியஸ்கள்!




Image result for youtube logo



யூட்யூப் ஸ்டார்ஸ்!

உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவு செய்து இணையத்தில் பகிரலாம். இணையத்தில் அப்படி பதிந்து யூட்யூபில் சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.

மேட்டி பிராப்ஸ் (Matty Braps)

2003 ஆம் ஆண்டு பிறந்து, யூட்யூப் தளத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைச் சம்பாதித்த, அமெரிக்க ராப் பாடகர். 2010 ஆம் ஆண்டு 'ஜஸ்ட் தி வே யூ ஆர் ' என்ற பாடலை வெளியிட்டார். 2014 ஆம் ஆண்டு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களின் மனங்களை வென்றார். இவரின் ஸ்பெஷல், புகழ்பெற்ற பாடல்களுக்கான கவர் பாடல்கள். இன்று யூட்யூப், ஃபேஸ்புக், ட்விட்டர் என பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. http://mattybraps.com/

ஈவன் (Evan)

ஈவன் தன்னுடைய யூட்யூப் சேனல் (Evantube) மூலம் தன் வயதுக்கார பையன்களுக்கு நாயகனாகி இருக்கிறார்.  எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது,  ஏன்? எதற்கு? எப்படி? வகையறா  வீடியோக்களை  பதிவிட்டு 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார்.  ஈவனின் தந்தை திரைப்படக்கலைஞர் என்பதால், வீடியோக்களுக்கு அவரே இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். வீடியோக்களுக்கு ஈவன் மற்றும் அவரது தங்கை ஜில்லியன் காம்பியராக மாறி அசத்துகின்றனர். இவர்கள் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். 
https://www.youtube.com/channel/UCHa-hWHrTt4hqh-WiHry3Lw

மியா (MYA)

பாட்டிலில் முட்டை, ரூபி க்யூப் சோதனை, பாட்டில் தெர்மோமீட்டர் என சிறிய ஆச்சரியமூட்டும் அறிவியல் சோதனைகளை மியா (FullTimeKid) செய்து காட்டுகிறார். இவரது நிகழ்ச்சி பிபிஎஸ் (PBS) டிவி சேனலிலும் ஒளிபரப்பாகி உள்ளது. 78 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை தனது குறும்பான, அறிவுப்பூர்வ சோதனைகளுக்குப் பரிசாகப் பெற்றுள்ளார் மியா.

https://www.youtube.com/channel/UC0Grg2zrx1qlJtipR8_7GiQ

காபே மற்றும் காரெட் (Gabe and Garrett)

கேப் அண்ட் காரெட் என இரு சிறுவர்களும் இந்த யூட்யூப் சேனலை இயக்குகின்றனர். பொம்மைகள் விமர்சனம், சைட்வாக் காப்ஸ் தொடர் என ஆர்வமூட்டும் பல வீடியோக்களை பதிவிட்டு பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளனர். சிறுவர்களின் பெற்றோர் உதவியுடன் 2013 ஆம் ஆண்டு தொடங்கிய பணி இது. இத்தளத்தின் சிறப்பு, சைட்வாக் கேம்ஸ் எனும் சிறுவர்  கதை. போலீஸ் திருடன் கதையை விறுவிறுப்பாக படமாக்கி ரசிக்க வைத்துள்ளனர். 

https://www.youtube.com/channel/UCdYlEm7h4mOc0H-7Mo8rB6w

ராபி நோவக்

அமெரிக்காவைச் சேர்ந்த ராபி நோவக், பாடகர், கவிஞர், சுயமுன்னேற்ற பேச்சாளர் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். 2012 ஆம் ஆண்டு தொடங்கி சோல்பான்கேக் வலைத்தளத்தில் கிட் பிரசிடெண்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். "அன்பு உலகை மாற்றும். உலகை அன்பால் நிறைப்போம்” எனும் குழந்தை அதிபர், மரபணு நோயான  ஆஸ்டியோ ஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா (osteogenesis imperfecta)வினால் பாதிக்கப்பட்டவர். இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

https://www.youtube.com/playlist?list=PLzvRx_johoA-YabI6FWcU-jL6nKA1Um-t&feature=plcp

நன்றி: தினமலர் பட்டம்






பிரபலமான இடுகைகள்