புதுமையான தனிம வரிசை அட்டவணைகள்!
வெரைட்டியான தனிம வரிசை அட்டவணை
1869 ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டலீவ், தனிம வரிசை அட்டவணையை உருவாக்கினார். இதனை தனிமங்களின் நிறை அடிப்படையில் உருவாக்கி பட்டியல் இட்டார்.
150 ஆண்டுகள் ஆன பிறகு இதில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இதிலுள்ள 63 தனிமங்களை இடமாற்றம் செய்யவும் ஆய்வாளர்கள் முயற்சித்தனர். மேலும் தனிம வரிசை அட்டவணையை பல்வேறு வடிவமைப்பில் 118 தனிமங்களை அமைத்து வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு தனிமங்களுக்கு இடம் விட்டு மெண்டலீவ் உருவாக்கி அசல் தனிம வரிசை அட்டவணை இது. பின்னாளில் பல தனிமங்கள் இதில் இடம்பிடித்தன.
-
இந்த தனிம வரிசை அட்டவணை 2006 ஆம் ஆண்டு வேலரி சிமர்மென் என்பவரால் உருவாக்கப்பட்டது. சார்லஸ் ஜேனட் என்பவரின் சிந்தனையைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அட்டவணை இது. எலக்ட்ரான்களின் அணு எண் அடிப்படையில் இந அட்டவணை உருவானது. இதனை டவர் டேபிள் என்று குறிப்பிடலாம்.
1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிம அட்டவணை இது. வேதியியலாளர் தியோடர் பென்ஃபி உருவாக்கினார்.
3டி பிளவர்
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இடம்பெறாத அட்டவணை இது.
வானவில் அட்டவணை
1975 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்களின் ஹைட் என்பவர் உருவாக்கிய அட்டவணை இது. சிலிகான் எப்படி பிற தனிமங்களோடு இணைகிறது என்பதை இதில் கூறியிருக்கிறார்.
நன்றி:சயின்ஸ் அலர்ட்