நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...