இடுகைகள்

பிளஸ் சைஸ் மாடலிங்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளஸ் சைஸ் பிளஸ்தான்!

படம்
பட்டையைக் கிளப்பும் பிளஸ் சைஸ் மாடலிங்! –- ச.அன்பரசு ஹேர்ஸ்டைலை இப்படி மாத்து, என்னோட ஃபேஷியல் க்ரீம் பிராண்ட்டை யூஸ் பண்ணு என மேக்அப்களில், உடைகளில் உலகம் நமக்கு தரும் அட்வைஸ்கள் ஏராளம், தாராளம். அதுவும் கொஞ்சம் பூசினாற்போல இருந்தால் ‘குண்டு கத்தரிக்காய், அமுல்பேபி,’ என டஜன் பெயர்களை வைத்து அக்கம்-பக்கம் சொந்தம் என அவர்களை படாதபாடு படுத்திவிடும். உடலை கிண்டல் செய்ததால் மனமுடைந்து கண்ணீர் விட்ட பெண்கள், இன்று ஃபேஷன் துறையில் பெருமையாக கேட்வாக் போகின்றனர். உலகமே இளப்பமாக பார்த்து சிரித்த அவர்களின் கொழு கொழு உடலே அவர்களை உலகெங்கும் பேசப்படும் ஸ்டார்களாக்கியுள்ளது.     ஒருவரின் உடலின் நிறம், தோற்றம் என்பது அவரவர் விருப்பம் என உலகெங்கும் ‘பாடி பாசிட்டிவ்’ பிரசாரம் தீவிரமானதில் பிரயோஜனம் உண்டு. அண்மையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன்வீக் நிகழ்வில், 29 புதுமுக குண்டுபெண்கள் பிளஸ் சைஸ் உடைகளை விளம்பரப்படுத்த கம்பீரமாக நடைபோட்டு சாதனை புரிந்துள்ளனர்.   கொழு கொழு வரலாறு! ஆரோக்கியமற்ற கலாசாரத்தை பிரசாரம் செய்கின்றனர் என பலர் புகார் வாசித்தாலும் அமெரிக்காவின் நியூயார்க் ஏஜன்ச