இடுகைகள்

கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத அடிப்படைவாதிகளால் ஏற்பட்ட உடல் வலியை விட நண்பர்களால் ஏற்பட்ட உள வலி பெரிது! - டிஜே ஜோசப்

படம்
  டிஜே ஜோசப்  எழுத்தாளர் 2010ஆம் ஆண்டு கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.ஜே. ஜோசப் தேர்வுத்தாள் ஒன்றை தயாரித்தார். அதில் அவர் தேர்ந்தெடுத்த கேள்வி அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் இதற்காக அவரை பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது. அந்த அமைப்பின் தொண்டர்கள் ஜோசப்பின் மணிக்கட்டை வெட்டி எறிந்தனர். அண்மையில் தனது சுயசரிதையை எழுதியிருக்கிறார். அதனை ந ந்தகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலில் தனது மனைவி, வேலை, மணிக்கட்டை இழந்தது பற்றி உணர்ச்சிகரமாக எழுதியிருக்கிறார்.  உங்களது சுயசரிதை பிரசுரமானது தொடங்கி பரபரப்பாக விற்று வருகிறது. மலையாளத்தில் இந்த நூல் 2020ஆம் ஆண்டு வெளியானது.  இப்போது அதன் மொழிபெயர்ப்பு எ தவுசண்ட் கட்ஸ் ஏன் இன்னோசன்ட் கொசின்ஸ் அண்ட் டெட்லி ஆன்ஸ்ர்ஸ் வெளியாகயுள்ளது. என்ன தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என நினைக்கிறீர்கள்? மத அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவைதான் என்மீது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட காரணம். இன்று அதே தன்மை இயல்பானதாக பார்க்கப்படுகிறது.  என்னுடைய வாழ்க்கையைப் பார்க்கும் ஒருவர் தீவிரவாதம் பற்றிய கருத்தை இரண்டாவத

முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி!- முதலையால் ஒற்றைக்கையை இழந்தும் குறையாத அன்பு!

படம்
                  முதலைகளைப் பாதுகாக்கும் பூசாரி ! சத்தீஸ்கர் மாநிலத்தில் கோட்மி சோனார் எனும் குளத்தில் உள்ள மக்கர் வகை முதலைகளை பாதுகாக்கும் பணியை 2006 ஆம் ஆண்டிலிருந்து செய்துவருகிறார் . சீத்தாராம் தாஸ் என்பதுதான் அவரின் பெயர் . ஆனால் கிராமத்தினர் ஒற்றைக்கை இல்லாத அவரின் பணிகளைப் பார்த்து பாபாஜி என்று அழைக்கின்றனர் . துன்பம் செய்தவருக்கும் நன்மை நினைத்து நல்லது செய்யவேண்டும் என்று சொல்வார்கள் . திருக்குறளிலும் கூட இப்படி சொல்லப்படுவதுண்டு . உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்தால் அவரை நாம் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் ? பாபாஜியும் அப்படித்தான் . 2006 ஆம் ஆண்டு குளத்திலுள்ள முதலை முட்டைகளை காப்பாற்ற முயன்றார் . இதில் கோபமுற்ற பெண் முதலை அவரது இடதுகையை கடித்துவிட்டது . முற்றாக சேதமடைந்த கையை அகற்ற வேண்டியதாகிவிட்டது . அப்படி ஒரு கொடுமை நடந்தபோதும் பாபாஜிக்கு முதலைகள் மீது கருணை குறையவில்லை . இப்போதும் அவர் காப்பாற்ற நினைத்த மூன்று முதலைகளை வந்து பார்த்துவிட்டு செல்கிறார் . தினசரி மூன்று முறை அதனை அழைக்கிறார் . அவையும் யார் அழைப்பது என எட்டிப்பார்த்துவிட்டு அவரை அட

பத்து ஆண்டுகள் கைகழுவாத ஆசாமி

படம்
பீட்டே ஹெக்செத் நன்றி: தி கார்டியன் கிருமிகள் என்பதே பொய்.. ஏறத்தாழ ஓராண்டு அல்ல. பத்து ஆண்டுகள் ஒருவர் கை கழுவ வில்லை என்று கூறியிருக்கிறார். நாம் பாத்ரூம் போனால் கை கழுவுகிறோம். சாப்பிடும்போது கைகழுவுகிறோம். அப்படியானால் கிருமிகள் நம்மை பாதிக்கிறதா இல்லையா? ஃபாக்ஸ் டிவியில் அதிபர் ட்ரம்புக்கு பிடித்த ஷோ, ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ். ஏன் பிடிக்கும்? வெள்ளை மாளிகையின் அஜெண்டாவுக்கேற்ப நிகழ்ச்சியை நடத்துவார்கள். பேசுவார்கள். அதன் தொகுப்பாளர் பீட்டே ஹெக்செத், மேற்சொன்ன பத்து ஆண்டுகள் கை கழுவாத ஆசாமி. இதைச்சொல்லி ஒட்டுமொத்த உலகையே பீதிக்கு உள்ளாக்கி உள்ளார். கிருமிகள் என்பது உலகில் கிடையாது என்றவர், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது பைப்பில் மது அருந்துவது என கலவையான வினோத விஷயங்களை செய்துவருகிறவர் என அவரது ட்விட்டர் கணக்கு பதிவுகள் நமக்கு சொல்லுகின்றன. உடனே பஞ்சாயத்து தேசிய நோய்த்தடுப்பு மையத்திற்கு வந்தது. அவர்களே வயிற்றுப்போக்கு 40 சதவீதம் வருவதே கை கழுவாத தால்தான் என சத்தியம் செய்திருக்கிறது. ட்ரம்பின் ஆதரவாளர் கூட அறிவியலுக்கு புறம்பாக எப்படி பேசுகிறார் பாருங்கள்