இடுகைகள்

விண்வெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலன் மஸ்க் எப்படி சிந்திக்கிறார் என்பதை கண்டுபிடிப்போம் வாங்க!

படம்
  எலன் மஸ்க் எந்தெந்த சமூக வலைத்தள கணக்குகளை தொடர்கிறார்?   சுனக், மேக்ரான், மோடி, வான் டெர் லியான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரச குடும்பம் ஆகிய கணக்குகளை பின்தொடர்கிறார். இதன் அர்த்தம், அவர் அவற்றை பின்தொடர்கிறார் அவ்வளவுதான். இங்கு வெளியிடப்படும் அனைத்து கருத்துகளை ரீட்விட் செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நானும் இருக்கிறேன் என்று கூறுகிறார். மற்றபடி இந்த கணக்குகளை அவர் எப்போதாவது எட்டிப்பார்க்கிறாரா என்று கூட தெரியாது. பிபிசி செய்திகளை பின்தொடர்கிறார். அதேசமயம் இதுவரை தனது ட்விட்களில் அதை எந்த கண்டனமும் செய்ததில்லை என்பதையும் நினைவுகூர்கிறேன். டெஸ்லா கார்கள் விற்பனை, பங்கு விலை உயர்வு பற்றிய சந்தோஷமான கருத்துகளை எலன் கவனிக்கிறார். அவற்றை பகிர்கிறார். அவரைப் பொறுத்தவரை நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதை அதன் உரிமையாளர் எப்படியான மனநிலையில் செய்வாரோ அதேபோன்றதுதான் இதுவும் என கூறலாம். பாலியல் கல்வியை அரசியல்மயப்படுத்துவது, ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய கருத்துகள், கோவிட் தடுப்பூசி பற்றிய கருத்துகள் ஆகியவற்றை பற்றிய விஷயங்களை எலன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் ப

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ

விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

படம்
    இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்   விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்   2019 ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது. அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்த

அமெரிக்காவின் முதல் விண்கலம் - ஸ்கைலேப்

படம்
  அமெரிக்கா உருவாக்கிய முதல் விண்கல ஆராய்ச்சி மையம், ஸ்கைலேப். 1973ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி, நாசா இதனை விண்ணில் ஏவியது. மூன்று விண்வெளி வீர ர்களுடைய குழு இந்த விண்கல ஆராய்ச்சிக் கலத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சிகளை செய்தனர். இதில் புவிவட்டபாதை, பூமியைப் பற்றிய ஆராய்ச்சி, சூரியனைப் பற்றிய ஆய்வக ஆய்வு என நிறைய விஷயங்களை அங்கு செய்தனர் . ஸ்கைலேப் விண்ணில் ஏவப்பட்டு பதினொரு நாட்கள் கழித்து மே 25 அன்று மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு கிளம்பினர். சார்லஸ் கான்ராட், பால் வெய்ட்ஸ், ஜோசப் கெர்வின் ஆகியோர் தான் கிளம்பிய மூவர். இவர்கள் விண்கலத்திற்கு சென்று நிறைய பழுதுகளை நீக்கினர்.மைக்ரோமெட்ராய்ட் கவசம், சோலார் பேனல் பழுதுப்பட்டிருந்தது  அடுத்த குழுவினர் 1973ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணுக்கு கிளம்பினர். இவர்கள் அங்கு சென்று 59 நாட்கள் இருந்தனர். பணியாற்றினர்.  1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ற மூன்றாவது குழுவினர். 84 நாட்கள் விண்ணில் இருந்தனர். பிறகு மெல்ல ஸ்கைலேப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. நாசா, கீழிருந்து அனுப்பிய கட்டளைகள் மூலம் விண்கலத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது. பூமிய

வேற்றுகிரகத்திற்கு செல்ல விண்வெளி வீரர்கள் பயிற்சி செய்வது இங்குதான்! - ஐஸ்லாந்து

படம்
  நிலவைப் போன்ற நிலப்பரப்பு கொண்ட நாடு! முழுமையாகவே அப்படி ஒரு நிலப்பரப்பு உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் நிலவு, செவ்வாய் ஆகிய கோள்களில் உள்ள சிக்கலான நிலப்பரப்புகளை ஒத்த நிலப்பரப்பு பூமியில் உண்டு. ஆம், ஐஸ்லாந்து நாட்டில் தான் இப்படிப்பட்ட வினோத நிலப்பரப்பு உள்ளது.  1960ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி அமைப்பான நாசா, அப்போலோ திட்டத்தில் முனைப்பாக இருந்தது. அப்போது விண்வெளி வீரர்களுக்கு, நிலவைப்போன்ற நிலப்பரப்புள்ள தீவு நாடுகளை தேடிக்கொண்டிருந்தது. அப்படித்தான் ஐஸ்லாந்து நாட்டை நாசா விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர்.  ஐஸ்லாந்தில் வடக்கு கடற்புரத்தில் ஹூசாவிக் (Husavik) எனும் இடம் உள்ளது. இங்கு மீன்பிடிக்கும் மக்கள் 2,300 பேர் வாழ்கின்றனர். நாசா அமைப்பு, 1969ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீர ர்களை அனுப்புவதற்கு முன்னர், வீரர்களுக்கு  சிறப்பாக பயிற்சியளிக்க முடிவெடுத்தது. இதற்காக 32 விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். இப்படி தேர்வானவர்களில் நிலவில் கால்வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும் உண்டு.  2019ஆம் ஆண்டுதான், மனிதர்கள் நிலவில் கால்வைத்து ஐம்பது ஆண்டுகள் ஆனதை விண்வெளி அறிவி

பூமியில் கிடைக்கும் தங்கம் உருவான கதை!

படம்
விண்வெளியிலிருந்து உருவான உலோகம்!  இன்று ஒருவரின் செல்வ வளம், நிலம், சேர்த்து வைத்துள்ள பல்வேறு நகைகளோடும் சேர்த்தே  அளவிடப்படுகிறது. அதிலும் அவர் தங்கத்தை சேர்த்து வைத்தால், அதன் மதிப்பு ஆண்டுதோறும் கூடிக்கொண்டே வரும்.   உண்மையில் இந்த தங்கம் எப்படி உருவானது? தங்கம் அரிதான உலோகம் என்பதோடு, அதன் உருவாக்கத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  நட்சத்திரங்களின்  இணைதலின்  விளைவாகவே, தங்கம் உருவாகியிருக்கும் என  அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். நட்சத்திரங்களில் உள்ள சிறு பகுதிகள் ஒன்றாக இணைவதன் வழியாக, அதிலிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. நட்சத்திரங்களில் பெருமளவு உள்ள ஹைட்ரஜன் இதில் அதிக பங்களிப்பைத் தருகிறது.   சிறு பகுதிகளின் இணைவு அல்லது மோதலின்போது வெப்பமும், அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவாகவே, நட்சத்திரத்தின் அடிப்பகுதியில் ஹீலியம் உருவாகிறது.  இந்த செயல்பாடு சுழற்சியாக நடைபெறுகிறது. இச்செயல்பாடு, இரும்பு உருவாகும் வரை தொடர்கிறது. இரும்பு, வினையில் உருவாகும் ஆற்றலை பெருமளவு உறிஞ்சுகிறது. இதன் விளைவாக, நட்சத்திரம் மெல்ல சிதைவடைகிறது. அதிகரிக்கும்

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர

குழந்தைகள் உணவுப்பொருட்களை அடிக்கடி துப்பிவிடுவது ஏன்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? விண்வெளியில் கண்டுபிடித்த ஏதாவது பொருட்களை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? நேரடியாக அறிவியலின் பயன்பாடு என்றால் வானியல் விஷயத்தில் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இந்த துறையில் உருவாகும் விஷயங்கள் எல்லாமே கோட்பாடு, கலாசார ரீதியான தன்மை கொண்டவை. விண்வெளியில் நாம் ஆய்வு செய்யும் விஷயங்கள் தொடர்பான அனைத்தையும் நாம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால், அணு தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் நான் அணு ஆற்றலை எப்படி தினசரி வாழ்க்கைக்கு பயன்படுத்துவது என அறிந்துகொண்டோம். மேலும் டிஜிட்டல் கேமரா, எம்ஆர்ஐ  ஸ்கேனர் ஆகியவற்றை நாம் இந்த வகையில் வானியல் ஆராய்ச்சி மூலமே மேம்படுத்தினோம். இப்போது இதனை படிக்கும்போது, சற்றே கழுத்தை சாய்த்து மணிக்கட்டில் உள்ள கேசியோ வாட்சை பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் கூட இப்படிப்பட்ட வானியல் ஆராய்ச்சி முன்னேற்றம் காரணமாக உருவானதுதான்.  குழந்தைகள் உணவுப் பொருட்களை பெரும்பாலும் துப்பிவிடுகிறார்களே அது ஏன்? குழந்தைகள் தாய்ப்பால் வழியாகவே தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறார்கள். முதல் ஆறுமாதம் தாய்ப்பால் எந்தளவு முக்கியம்

2022 ஆம் ஆண்டு அறிவியல் நூல்கள்! - நியூ சயின்டிஸ்ட் இதழ் பரிந்துரை

படம்
  தி அன்ஃபெமிலியர் கார்டன் பெஞ்சமின் பெர்சி ஹாடர் அண்ட் ஸ்டப்டன் இதுதொடர் வரிசை நூல். இரண்டு நூலாக வெளியாகிறது. கோள் ஒன்று குறிப்பிட்ட வகை உலோகத்துடன் வருகிறது. இது எப்படி சூழலை மாற்றுகிறது என்பதுதான் நூலின் மையம்.  புளூடோசைன் லூசி கிசிக் ஓரியன் எழுத்தாளர் அணு விஞ்ஞானி. புவி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். புளூடோ, வேற்றுகிரக இனங்கள் கண்டறிந்தது ஆகியவற்றை பற்றி ஆசிரியர் விளக்குகிறார்.  தி கார்டோகிராபர்ஸ்  பெங் ஷெப்பர்ட் ஹாசெட் அப்பாவின் மரணத்தைப் பார்க்கிறார் அவரது மகள். இளம்பெண்ணான அவருக்கு மெல்ல தந்தையின் பொருட்களைப் பார்க்க பல்வேறு புதிர்கள் தெரிய வருகின்றன.  கோலியாத்  டோசி ஒன்யேபுசி டோர்டோட்காம் 2050இல் விண்வெளியில் காலனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு சென்று வாழ அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி. மீதியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே நாவலின் முக்கியமான மையம். ட்ரீம்ஸ் பிக்கர் தென் ஹார்ட்பிரேக் சார்லி ஜேன் ஆண்டர்ஸ் டைட்டன் விண்வெளியில் வாழும் புத்திசாலிகள் பற்றிய கதை. இளம்வயதினர், அறிவியல் நாவல் என இரண்டும் கலந்த வகையில் வேடிக்கையாக, மாற்

வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!

  வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முற

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்

விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி!

படம்
  விண்கலத்திற்கு சக்தியூட்டும் புதிய பேட்டரி! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, விண்கலத்திற்காக புதிய வகை பேட்டரிகளை கண்டுபிடித்துள்ளது.  நாசா நிறுவனம் விண்வெளிக்கு பல்வேறு விண்கலங்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை செயல்படுவதற்கான ஆற்றல் தேவைக்கு சோலார் பேனல்கள், பேட்டரிகள், அணு பேட்டரிகள் உதவி வருகின்றன.  விண்கலத்தில் உள்ள கேமராக்கள், ரோவர்கள், வழிகாட்டும் வசதிகள் செயல்பட ஆற்றல் தேவை. இதனை சூரிய ஆற்றல் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது.  ஒளி படாத இருளிலும் ஆராய்ச்சிகள் தடைபடாமல் இருக்க பேட்டரிகள் உதவுகின்றன. கோள்களில் இருளான பகுதிகளில் ஆராய்ச்சி தடைபடாமல் இருக்க கொசுவர்த்தி சுருள் போல மெதுவாக ஆற்றல் செலவிடும்படியான பேட்டரிகள் தேவை. இதற்காக நாசா நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் சார்ந்த இரண்டு குழுக்களுக்கு ஆராய்ச்சி செய்ய நிதியுதவி அளித்து வருகிறது.  செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஆப்பர்சூனிட்டி, ஸ்பிரிட் என இரண்டு ரோவர்களிலும் சோலார்பேனல்கள், பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இவை செவ்வாயில்  நிலவிய தூசிப்புயல் சூழல்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை. அடு

அறிவியலை மாணவர்களுக்கு விளக்கும் 50 கட்டுரைகள்!- துளிர் அறிவியல் கட்டுரைகள்

படம்
            துளிர்  அறிவியல் கட்டுரைகள் ப. 152 விலை ரூ. 150 இந்த நூலில் துளிர் இதழில் வெளியான 50 முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே பொதுமுடக்கம் காரணமாக பிடிஎப் வடிவில் வெளியான துளிர் இதழ்களி்ல் வெளியானவை.  படிக்க ஏதுவான கட்டுரைகள் என்பதை விட நிறைய விஷயங்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற நோக்கில் படித்தால் ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்கலாம்.  சோப்புகளை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எலும்புன்னா எனக்கு பிடிக்குமே என்ற கழுகு பற்றிய கட்டுரை, நோபல் பரிசு 2020, மணற்குளி நண்டுகள் ஆகியவற்றை படிக்க சிறப்பாக இருந்தன.   இந்த நூலில் இயற்பியல் வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகள் பேசப்படுகின்றன. கட்டுரைகள் வழியாக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இந்நூலை படிக்க நினைத்தால் இதிலுள்ள தகவல்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது உறுதி.  கோமாளிமேடை டீம் நன்றி  பாலபாரதி பிரபாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்    

விண்வெளி பொறியியல் துறையில் வேலை கிடைப்பது எப்படி?

படம்
  விண்வெளி பொறியியல் துறை அறிவியல்துறையில் இன்று பெரும் வரவேற்பு பெற்று வருவது, விண்வெளி பொறியியல் துறை. விமானம் மற்றும் விண்கலத்தின் வடிவமைப்பு, மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கும் துறை இதுவே. இன்று உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் டிரோன்கள் முதல் ராக்கெட்டுகள் வரையிலான தயாரிப்புகளை மேற்கொள்வது இத்துறையினர்தான்.  இதற்கு அடிப்படையானது, இயற்பியலில் ஆற்றல், விசை, இயக்கம் குறித்த அறிவுதான். கூடவே கணிதத்தின் உதவியும் தேவை. இதில் ஏற்படும் சிறிய தவறும் கூட விமானம் மற்றும் விண்கலத்தின் இயக்கத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விண்வெளி பொறியியல்துறையினர், செயற்கைக்கோள், விமானம், விண்கலங்கள் ஆகியற்றைத் தயாரிக்கின்றனர். அதோடு அதன் வடிவமைப்பு, சோதனை, பராமரிப்பு என அனைத்து விஷயங்களையும் மேற்கொள்வார்கள்.  கல்வியை பிரமாதமாக கற்றுவிட்டீர்கள். ஆனால், இதற்கான வேலை எங்கு கிடைக்கும்? போயிங், நாசா, ஸ்பேஸ் எக்ஸ், லோக்கீது மார்ட்டின், ஜேபிஎல், ஜெனரல் எலக்ட்ரிக் என ஏராளமான நிறுவனங்கள் விண்வெளி பொறியியலாளர்களை வரவேற்க காத்துக் கிடக்கின்றன. இதில் வேலைவாய்ப்புகள் என்பது நிறைய மாறுபடும். சில பொறியாளர்களுக்கு

விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

படம்
  விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்! விண்வெளியில் பூமியின்  அருகிலேயே அமைந்துள்ள கீழ்மட்ட சுற்றுப்பாதையில் எதிர்காலத்திற்கான ஆபத்து குவியலாக உருவாகத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான  செயற்கைக்கோள்களின் கழிவுகள்தான் அவை.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் 1 மி.மீ அளவிலிருந்து 1 செ.மீ அளவுகள் வரை உள்ளன.  செயலற்றுப்போன செயற்கைக்கோள் உள்ளிட்ட கழிவுகளை எரிக்க லேசர் கதிர்கள், காந்தம் மூலம் அதனை சேகரித்து அழிப்பது உள்ளிட்ட முயற்சிகளை உலக நாடுகள் முயற்சிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிகள் துகள்களை உடனே கைப்பற்றி அழிப்பதும் சாதாரண காரியமல்ல; ஈர்ப்புவிசையின் விளைவாக 56 ஆயிரம் கி.மீ வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்  பூமியைச்  சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதனை நுட்பமாக கவனிப்பதே சவாலான காரியம்.  தற்போது எம்ஐடி பல்கலைக்கழகம் பிளாஸ்டிக்குகளை அதிவேகத்தில் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. எம்ஐடியில்  மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங்  துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முஸ்தபா ஹசானி கங்காராஜ், அத்துறை தலைவரான கிறிஸ்டோபர்  ச்சூ(Schuh) ஆகியோரின் புதுமையான ஆராய்ச்சிக் கண்டுபிடிப

டாப் 5 வானியல் அமைப்புகள்

படம்
  டாப் 5 வானியல் அமைப்புகள் ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா (Jyotirvidya Parisanstha (JVP)) –  ஜோதிர்வித்யா பரிசன்ஸ்தா, மகாராஷ்டிராவின்  புனேவில் அமைந்துள்ள  அமைப்பு. 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பரிசன்ஸ்தா, வானியலை மக்களிடையே பிரசாரம் செய்வதை லட்சியமாகக் கொண்டுள்ளது. http://jvp.org.in/  அஸ்ட்ரானாமிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronomical Society of India (ASI) ) 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வானியல் ஆர்வலர்களுக்கான அமைப்பு. நாடு முழுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டத்தில் வானியலின் முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் விவாதிக்கப்படுகின்றன.  TIFR, IISER, IISc, IIT, ISRO, PRL , IIAP உள்ளிட்ட அரசு அமைப்புகளில் பணிபுரியும் ஆய்வாளர்களும் வானியல் சொசைட்டியில் முக்கியமான அங்கம்.  அசோஷியேசன் ஆஃப் பெங்களூரு அமெச்சூர் அஸ்ட்ரானமர்ஸ் (ABAA)  பெங்களூருவைச்  சேர்ந்த இந்த அமைப்பு, 1976 ஆம் ஆண்டு உருவானது. இந்த அமைப்பு, தொலைநோக்கி குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. வான் இயற்பியலில் ஆர்வம் கொண்ட தன்னார்வலர்களின் சங்கம் இது. வாரம்தோறும் ஞாயிறு அன்று சந்

விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!

படம்
  விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!  விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில்  சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு விஷயங்களை கட்டுப்

உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்

படம்
      உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான் ! ரியல் : 1968 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின . சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள் , சாகச நாவல்கள் கூறின . பூமியில் நிலவும் கடும் குளிர் , அனல் வெயில் , மழை , புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது . மூளை செயல்படாதபோது , உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது . ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால் , அவர்கள் நடந்துவருவது , ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை . நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் . ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம் . ஐம்புலன்கள் வேலை செய்யாது , செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை . நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது ரியல் : உண்மை . இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந