2022 ஆம் ஆண்டு அறிவியல் நூல்கள்! - நியூ சயின்டிஸ்ட் இதழ் பரிந்துரை

 









தி அன்ஃபெமிலியர் கார்டன்

பெஞ்சமின் பெர்சி

ஹாடர் அண்ட் ஸ்டப்டன்

இதுதொடர் வரிசை நூல். இரண்டு நூலாக வெளியாகிறது. கோள் ஒன்று குறிப்பிட்ட வகை உலோகத்துடன் வருகிறது. இது எப்படி சூழலை மாற்றுகிறது என்பதுதான் நூலின் மையம். 


புளூடோசைன்

லூசி கிசிக்

ஓரியன்

எழுத்தாளர் அணு விஞ்ஞானி. புவி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். புளூடோ, வேற்றுகிரக இனங்கள் கண்டறிந்தது ஆகியவற்றை பற்றி ஆசிரியர் விளக்குகிறார். 


தி கார்டோகிராபர்ஸ் 

பெங் ஷெப்பர்ட்

ஹாசெட்

அப்பாவின் மரணத்தைப் பார்க்கிறார் அவரது மகள். இளம்பெண்ணான அவருக்கு மெல்ல தந்தையின் பொருட்களைப் பார்க்க பல்வேறு புதிர்கள் தெரிய வருகின்றன. 


கோலியாத் 

டோசி ஒன்யேபுசி

டோர்டோட்காம்

2050இல் விண்வெளியில் காலனிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு சென்று வாழ அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி. மீதியுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே நாவலின் முக்கியமான மையம்.

ட்ரீம்ஸ் பிக்கர் தென் ஹார்ட்பிரேக்

சார்லி ஜேன் ஆண்டர்ஸ்

டைட்டன்

விண்வெளியில் வாழும் புத்திசாலிகள் பற்றிய கதை. இளம்வயதினர், அறிவியல் நாவல் என இரண்டும் கலந்த வகையில் வேடிக்கையாக, மாற்றுப்பாலினத்தவர் பற்றிய விஷயங்களைப் பேசுகிற கதை இது. 

 

கருத்துகள்