இயற்கைச்சூழலில் மீன்பிடிபூனையின் பங்கு! - திசா ஆத்யா
இயற்கை செயல்பாட்டாளர் திசா ஆத்யா |
மீன்பிடி பூனையை காப்பாற்ற முயலும் தன்னார்வலர்!
கோல்கட்டாவைப் பூர்வீகமாக கொண்டவர், தியாசா ஆத்யா. கல்லூரியில் உயிரியலாளராக பயிற்சி பெற்றார். தனது 22 வயதில் இயற்கைப் பாதுகாப்பு பணிகளைச் செய்யத் தொடங்கினார். முதல்பணியாக, சுந்தரவனக்காடுகளில் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கும் பணியை செய்தார்.
மீன்பிடி பூனை |
காட்டுயிர் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரான வித்யா ஆத்ரேயாவை, தனது வழிகாட்டியாக தியாசாக கருதுகிறார். அமெரிக்க சிறுபூனை பாதுகாப்பாளரான ஜிம் சாண்டர்சன் (Jim sanderson), மூலம் பூனை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை தியாசா தொடங்கினார். மீன்பிடி பூனைக்கு மீன்தான் முக்கியமான உணவு. இதன் உரோமங்கள், நீர் உடலை நனைக்காதவாறு பாதுகாக்கிறது. இப்பூனையின் கால்கள், வலை போன்ற அமைப்பிலானவை. கால்களிலுள்ள நகங்கள், மீன்களைப் பற்றிப் பிடிக்க உதவுகிறது.
மேற்குவங்கத்தில் சதுப்புநிலங்களைக் காக்க க்ரௌட் ஃபண்டிங் முறையில் நிதி சேகரிக்கப்படுவதில் தியாசா முக்கியமான பங்காற்றியுள்ளார். பப்ளிக், ஹீல் ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2010ஆம் ஆண்டு தி ஃபிஷ்ஷிங் கேட் ப்ராஜெக்ட் (TFCP)என்ற திட்டத்தை தொடங்கினார். இதன்மூலம் சதுப்புநிலத்தையும் அதில் வாழும் மீன்பிடி பூனையும் பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்யத் தொடங்கினார்.
2020ஆம் ஆண்டு, ஒடிஷாவின் சிலிகா காயல் பகுதியில், மீன்பிடி பூனையை இயற்கை வளம் காப்பதற்கான தூதராக விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் பூனை இனத்தை காக்கும் முயற்சியும், அதைக் கண்காணிக்கும் செயல்பாடுகளும் தொடங்கப்பட்டன. இதில் தியாசாவும் ஊக்கமுடன் பங்கேற்றார்.
திசா ஆத்யா |
”வேறுபட்ட காலநிலை, உணவுச்சங்கிலி பாதிப்பு என நிறைய சவால்கள் உள்ளன. இதன் காரணமாக, சூழலியலாளராகவும், இயற்கை செயல்பாட்டாளராகவும் எனக்கு நிறையவே வேலைகள் உள்ளன” என்றார் தியாசா ஆத்யா.
தகவல்
a future for the fishing cat
HT
கருத்துகள்
கருத்துரையிடுக