டாலி என்ற செம்மறி ஆட்டிற்கு ஏன் இத்தனை புகழ்?

 








பல ஆண்டுகளாக குளோனிங் செய்வது என்பதை, அனைவரும் திரைப்படங்களில் தான் பார்த்து வந்தார்கள். டாலி என்ற ஆடு இந்த முறையில் உருவாக்கப்படும் வரை. இந்த செம்மறி ஆடுதான் முதன்முதலில் செம்மறி ஆட்டின் ஸ்டெம்மில் இருந்து உருவாக்கப்பட்டது. 

இந்த குளோனிங் ஆட்டிற்கு மூன்று அம்மாக்கள் உண்டு. ஒரு ஆட்டில் டிஎன்ஏ, மற்றொன்றில் கருமுட்டை, மூன்றாவது ஆட்டை வாடகைத்தாயாக பயன்படுத்தினார்கள். இப்படித்தான் டாலி என்ற குளோனிங் ஆடு உருவாக்கப்பட்டது. 



1996ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, டாலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது. இந்த ஆடு பிறந்து ஆறரை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தது. பொதுவாக ஒரு செம்மறி ஆட்டின் ஆயுள் காலம் பனிரெண்டு ஆண்டுகள் ஆகும். இந்த ஆடு குறுகிய காலமே வாழ்ந்ததற்கு குளோனிங் செய்தது காரணமாக என்று தெரியவில்லை. 

டாலியை உருவாக்கும்போது பெறப்பட்ட ஸ்டெம் செல் கொண்ட ஆட்டிற்கு ஆறுவயதாகியிருந்தது. எனவே பிறக்கும்போது, டாலியின் வயது ஆறு என்று நாம் கொள்ளலாம். 

டாலி ஆடு வெற்றிகரமான ஆறு குட்டிகளை ஈன்றது. இதனை தானாகவே செய்தது. இக்குட்டிகளுக்கு போனி, சாலி, ரோஸி, லூசி, டார்சி, காட்டன் என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று நடைபெறும் குளோனிங் ஆராய்ச்சிகளுக்கு டாலியே முன்னோடி. பன்றிகள், மான், குதிரைகள், காளைகள் ஆகியவற்றின் மீது இன்று குளோனிங் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 

1997ஆம் ஆண்டு பிப்ரவரி 22 அன்று டாலி குளோனிங் செய்யப்பட்ட தகவல் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. இந்த வகையில் இந்த முயற்சியும், முன்னேற்றமும், வெற்றியும் மருத்துவம், உயிரியல் ஆகிய இரு துறைகளிலும் ஏராளமான முன்னேற்றங்களுக்கு வித்திட்டது. இப்போது அழியும் நிலையில் உள்ள பல்வேறு அரிய விலங்கினங்களின் திசுக்களை வைத்தே நாம் அதனை உருவாக்கி விட முடியும். இந்த வகையில் அதனை குறைந்தபட்சம் குறைந்த எண்ணிக்கையில் தக்க வைக்க முடியும். 

அதற்காகவே நாம் டாலி குளோனிங் செயல்பாட்டிற்கு நன்றி சொல்லியாகவேண்டும். அந்த வகையில் இந்த நாள் முக்கியமானது. 

டெல் மீ வொய் இதழ் 

pinterest/behance


 


கருத்துகள்