கடல்நீருக்கு வாசனை எப்படி வருகிறது? பதில் சொல்லுங்க ப்ரோ?

 









பதில் சொல்லுங்க ப்ரோ?



1. உலகிலுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை பெறுமா?

கடல்நீர் உப்பாக இருப்பதை அறிந்து இப்படி பலரும்கேட்கிறார்கள். மழைபெய்து அதில் பாறைகள் கரைந்து உப்புத்தன்மை கடல்நீரில் கூடுகிறது. உப்பில் சோடியமும், குளோரினும் அதிகமாக இருக்கும். இந்த வேதிப்பொருட்களை  சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பில் காணலாம். பல நூற்றாண்டுகளாக கடலில் உப்பு சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலின் உப்புத்தன்மை சற்று கூடுவது உண்மை. ஆனால் ஏன் உயிரினங்கள் வாழ முடியாதபடி மாறவில்லை என யோசிக்கலாம். இப்படி அதிகரிக்கும் உப்பின் அளவு  அரை நூற்றாண்டுக்கு சில சதவீதமே கூடுகிறது. கடலில் இப்போது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சூரியனின் வெப்பம் கூடுவதால் கடலிலுள்ள நீர் வேகமாக ஆவியாகிறது. இதன் விளைவாக கடற்கரையில் உப்பு தேங்க வாய்ப்புள்ளது. நீரின் அளவு குறைவதால் உப்பு கடல்நீரால் கரைக்கப்படுவது குறைகிறது என இங்கிலாந்து சூழலியலாளர் ஜேம்ஸ் லவ் லாக் கூறியுள்ளார். 

2. கடல் நீருக்கு அதன் வாசனை எப்படி வருகிறது?

கடல்நீருக்கு தன்னளவில் எந்த வாசனையும் கிடையாது. ஆனால் அதில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள், உயிரினங்கள் அதற்கு வாசனையை ஏற்படுத்துகின்றன. கடல்நீரிலுள்ள பாக்டீரியாக்கள் டைமெத்தில் சல்பைடு (dimethyl sulphide)வேதிப்பொருளை உருவாக்குகின்றன. இதன்விளைவாக கந்தக மணம் வீசும். கூடுதலாக வரும் அயோடின் வாசனைக்கு(புரோமோபெனால் bromophenols) நீரில் வாழும் புழுக்கள், பாசிக்களே முக்கியமான காரணம். 

pinterset


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்