குறைந்த விலையில் சோலார் பேனல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன!
குறைந்த விலையில் சுடச்சுட சூரியன்!
சோலார் தகடுகள் மூலம் சூரிய ஆற்றலை சேமிப்பது முன்னர் இருப்பதை விட விலை குறைவானது . அடுத்த இருபது ஆண்டுகளில் சூரிய சக்தியே முக்கியமான ஆற்றல் ஆதாரமாக இருக்கும் என உலக ஆற்றல் முகமை (IEA) கூறியுள்ளது.
உலக ஆற்றல் முகமை, தற்போது அமைக்கப்படும் சூரிய ஆற்றல் தகடுகளால் இத்துறை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 சதவீதம் வளரும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு மாற்றாக முக்கியமான ஆற்றல் ஆதாரமாக 2025இல் சூரிய ஆற்றல் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தவிலை என்பதால் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய அதிகவாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூடலாம்.
1883ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் பேனல் கண்டறியப்பட்டது. அப்போது சூரிய ஆற்றலைத் தேக்கும் திறன் 1-2 சதவீதமாக இருந்தது. பல்லாண்டு கால ஆராய்ச்சிகளால் ஆற்றலைத் தேக்கும் திறன் மெல்ல முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சோலார் செல்களின் ஆற்றல் தேக்கும் திறன் 18.2 சதவீதமாக மேம்பட்டது. புதிய சாதனையாக 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் இதன் திறனை 47 சதவீதம் என்றளவுக்கு உயர்த்தினர். சாண்ட்விட்ச் வடிவத்தில் உள்ள சோலார் செல்களில் பல்வேறு அடுக்குகளாக உருவாக்கப்பட்டு ஆற்றல் தேக்கும் திறன் அதிகரிக்கப்பட்டது. வீடுகளில் பொருத்தும் சோலார் பேனல்களும் திறன் மேல்ல அதிகரிக்கப்பட்டாலும் கூட அடுக்குகளாக உள்ள சோலார் பேனல்களை யாரும் வாங்கி பொருத்தவில்லை. இதற்கு முக்கியக் காரணம், இதன் அதிக விலைதான். பொதுவாக நாம் பார்க்கும் சோலார் செல்களில் சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. இதுவே அதன் ஆற்றல் தேக்கும் திறனுக்கு காரணமாக உள்ளது.
தற்போது பெரோவ்ஸ்கைட் (perovskite) எனும் கனிமம் கிடைத்துள்ளது. இதன் அணு கட்டமைப்பு, சோலார் பேனலில் அதிக ஆற்றலை சேமிக்க உதவுகிறது. இதனை சோலார் பேனலில் நானோஃபிலிமாக ஒட்டுவதன் அதன் ஆற்றல் கூடும். இதனை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பிவி நிறுவனம் 28 சதவீதமும், வடிவமைப்பு ரீதியாக 43 சதவீதம் அதிகரித்ததாக கூறியது. ஆஸ்திரேலியாவின் குயின்லாந்தில், நியூ சௌத்வேல்ஸில் சோலார் பேனல் திட்டங்களை உருவாக்கப்பட்டு வருகின்றன. 2022ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவிருக்கும் இத்திட்டத்தில் ஆற்றல் அளவு 400 மெகாவாட் ஆகும். இதைப்போலவே ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் 10 ஜிகாவாட் சூரிய ஆற்றல் திட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள் வழியாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதுதான் திட்டம். இத்திட்டம் 2026இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்
Science illustrated australia 2021
Solar energy is now the cheapest power
Science illustrated australia 2021
-----------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக