அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆங்கிலம் அவசியம்!
ராதா கோயங்கா |
மும்பையிலுள்ள அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆர்பிஜி நிறுவனம் முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. தாய்மொழிக்கல்வியை பலரும் வலிமையாக பேசினாலும் வணிக மொழியாக வெற்றி பெற்றுள்ளது ஆங்கிலம்தான். அதனுடைய இடத்தை பிராந்திய மொழியோ, தேசியமொழியோ கூட பெறவில்லை என்பது நடைமுறை யதார்த்தம்.
அந்த வகையில் மும்பையிலுள்ள அரசுப்பள்ளிகளில் பெஹ்லாய் அக்சார் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை ராதா கோயங்கா என்ற பெண்மணி திட்டம் தீட்டி அரசு ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறார். கட்டாய கல்விச்சட்டத்தை மதிய உணவுத்திட்டத்துடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தியது அதன் வெற்றிக்கு உதவியது. அதைப்போலத்தான், நான் ஆங்கிலத்தில் பேசும் வகுப்பையும் கருதுகிறேன். இது அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தடையை நீக்கும் என நம்புகிறேன் என்கிறார் ராதா.
இவர் இப்பணிக்காக, தனது வேலையைக் கூட கைவிட்டுவிட்டு முழுமையாக இதனைச் செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஆங்கில கல்வித் திட்டம் இது. ஆனால் அப்போது வெறும் தன்னார்வலர்களின் உதவியை மட்டுமே பெற்றார். ஆனால் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதிலுள்ள நிறைய சவால்களை உணர்ந்தார். விரைவில் ஆங்கிலம் கற்பிக்கவென தனி குழுவை உருவாக்கினார்.
ராதாவின் கல்வித்திட்டத்தில் பாடங்களோடு ஆப் வழியாக கற்றுத்தரும் பயிற்சியும் உண்டு. இதில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள். இப்படி பயன்பெற்றவர்தான் ஜஸ்வந்த் கௌர் . இவர் பள்ளிப்படிப்பை பத்தாவதோடு முடித்துக்கொண்டவர். ராதா வழங்கிய ஆங்கிலக்கல்வியைக் கற்றவர், இப்போது வகுப்பில் தன்னம்பிக்கையோடு பாடங்களை எடுக்கிறார். வாட்ஸ் அப் குழுவிலும் கூட ஆங்கிலத்தில் பதில்களை பதிவிடுகிறார்.
இதில் பயன்பெற்ற இன்னொரு ஆசிரியர் அமினா ஷேக். இவர் பெஹ்லாய் அக்சார் திட்டம் மூலம் தனது மொழியறிவை கூர்தீட்டிக்கொண்டார். மராத்தி, இந்தி மொழி கற்ற ஆசிரியர்கள் தங்கள் மொழியறிவை இத்திட்டம் மூலம் வளர்த்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். ராதாவின் திட்டத்தின்படி உருவான தீக்சா எனும் ஆப்பில் 500 பாடங்கள் உள்ளன. மேலும் பாடங்களை டிடி சாகியாத்ரி என்ற டிவி சேனல் மூலமும் பார்த்து கற்க முடியும். அதற்கான வசதிகளையும் செய்துள்ளார். தினம் ஒரு கதை எனும் திட்டத்தை சில பிரபலங்களை வைத்து ராதா தொடங்கியிருக்கிறார். இதனை பொதுமுடக்க காலத்தில் மாணவர்களைப் படிக்க வைக்க தொடங்கினர். பெஹ்லாய் அக்சார் திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை ஆர்பிஜி நிறுவனம் வழங்குகிறது.
இந்தியா டுடே
ஸ்வேதா புன்ஞ்
கருத்துகள்
கருத்துரையிடுக