சட்டம் படித்தாலும் எழுத்து மீதான ஆர்வத்தால் சாதனை படைத்த எழுத்தாளர் - விக்டர் ஹியூகோ

 






விக்டர் ஹியூகோ


விக்டர் ஹியூகோ

இவரின் எழுத்துக்களில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் மக்கள் உணர்ந்தனர். பிரான்சின் மதிக்கப்படும் எழுத்தாளர் இவர். மனிதர்களின் அனுபவம், உண்மை ஆகியவற்றை எழுத்து வடிவமாக சிறப்பாக கொண்டு வந்தவர் இவர்தான். 

இலக்கியப் பங்களிப்பில் பகடி, கவிதை, த த்துவரீதியான எழுத்துகள், வரலாறு, விமர்சன கட்டுரைகள், அரசியல் பேச்சுகள் என ஏகத்துக்கும் எழுதி தள்ளியுள்ளார். 

ஹியூகோ பிரான்சின் பாரிஸ் நகரில் 1802ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று பிறந்தார். இந்த ஆண்டோடு இவர் பிறந்து 220 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு இன்னொரு ஆண்டு கூடும் என்பது நீங்கள் அறிய வேண்டிய அரிய தகவல்.  நெப்போலியன் ராணுவப்படையில் இருந்த ஜோசப் லியோபோல்ட் சிகிஸ்பெர்ட் யாரென்று தெரியுமா? அவர்தான் ஹியூகோவின் அப்பா.  பாரிஸ் நகரில் சட்டத்தில் பட்டம் பெற்றார். சட்டத்தை கொஞ்ச நாள் பயிற்சி செய்தார். 

பிறகுதான் ஆர்வம் எழுதுவதில் தொடங்கியது. முதலில் கருத்தை எளிதாக சொல்லுவதற்கான வடிவமான கவிதையை எழுத தொடங்கினார். பிறகு, சம்பவங்கள், நாடகங்கள், கட்டுரைகள் என எழுத தொடங்கினார். ஹியூகோவின் முதல் நாவல், ஹான் டி டிஐலாண்டே என்ற பெயரில் வெளியானது.  1824ஆம் ஆண்டு, நியூவெல்லெஸ் ஆடெஸ் என்ற பெயரில் கவிதையை எழுதி பிரசுரித்தார். 

பிரான்சின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் என இவரை அந்நாட்டு மக்கள் நினைவுகூருகிறார்கள்.  தி ஹன்ச்பேக் ஆப் நாட்ரர்டேம் , லெஸ் மிஸரபிள்ஸ் ஆகிய இரு படைப்புகளும் விக்டர் ஹியூகோவின் பெயரை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றது. 

டெல் மீ வொய் இதழ் 


கருத்துகள்