வீட்டின் ஹாலில் இருக்கவேண்டிய பொருட்கள்! - ஹெட்செட், புரஜெக்டர், ஐபேட் புரோ, ஸ்பீக்கர்

 










ரேஷர் பிளாக் ஷார்க் வி2 கேமிங் ஹெட்செட்

கம்ப்யூட்டர், கன்சோல் என இரண்டிலும் இந்த ஹெட்செட்டைப் பயன்படுத்தலாம். நீண்ட நேர விளையாட்டுக்கும் ஏற்றதாக ஹெட்செட் உள்ளது. ஒலியின் தரமும், மைக்கும் கூட சிறப்பாக இயங்குகிறது. 

விலை 9,000





எப்சன் இஹெச் டி டபிள்யூ 7100

4 கே புரஜெக்டர். இதனை வீட்டிலயே  பொருத்தி நோய்த்தொற்று பாதிப்பில்லாமல் படங்களைப் பார்க்கலாம். இந்த புரஜெக்டர் இருந்தால் உங்கள் தலைக்கு பின்னே சோளப்பொரியை கறுக் முறுக் என சாப்பிடும் சத்தம் இருக்காது. யாரும் போனை நோண்டிக்கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தை கெடுக்க மாட்டார்கள். ப்ளூடூத் வசதி இருப்பதால் எளிதாக ஸ்பீக்கர்களில் பொருத்தி பாடலை படத்தை ரசிக்கலாம். இதில் வெளிவரும் ஒளியும் சிறப்பாக இருப்பதால், இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோமே என்ற பயமும் வராது. 

விலை 1,599





சோனி பிஎஸ் எல்எக்ஸ் 310பிடி

ப்ளூடூத் டர்ன்டேபிள்

நீங்கள் கிராம போனில் பாட்டு கேட்கும் ஆள் என்றால், இந்த பொருள் உங்களுக்கானதுதான். சோனியின் இந்த தயாரிப்பு கொஞ்சம் நவீனமானது.  ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஹெட்போன் எதனுடனும் இணைத்துக்கொள்ளலாம். ரிலாக்சாக படுத்துக்கொண்டே இசைக்கடலில் ஆனந்தமாக நீந்தலாம். 

விலை 23,000



ஐபேட் புரோ 12.9 

ஆப்பிள் நிறைய ஐபேடுகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இது ஸ்பெஷல்தான்.  12.9 இன்ச்சில் அகலமான திரை. ரெட்டினா எக்ஸ்டிஆர் தொழில்நுட்பத்தில் உருவானது. இதன் எம்1 புரோச்சரும் கூட வேகமாக வேலைசெய்கிறது. பிளாக்பஸ்டர் படமாகட்டும், டிஜிட்டல் இதழாகட்டும் படிக்க பிரமாதமாக இருக்கிறது. ஆப்பிளின் தரமோ தரம். 

விலை  99, 900 




ஆடியோ புரோ

ஆடான் சி 10 

மார்க் 2

வயர்லெஸ் ஸ்பீக்கர். இதன் போட்டியாளர்களை விட மார்க் 2 விலை குறைவானது. பேஸ் ஒலி மனதை மயக்குகிறது. துல்லியமான ஒலியில் நீங்கள் வெளியுலகையே மறந்துவிடுவீர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

விலை 35,900


டி 3 இதழ் 


கருத்துகள்