மகத்தான இலக்கிய எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர்!
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு பெரிய மரியாதை உண்டு. அவரின் பல்வேறு நாடகங்கள்,கதைகளை வைத்து ஆங்கிலப் படங்களை உருவாக்கியுள்ளனர். இப்போது பார்க்கப்போவது அவரைப்பற்றித்தான்.
1564ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று, ஷேக்ஸ்பியர் பிறந்தார். ஜான் மற்றும் மேரி ஷேக்ஸ்பியர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ட்ராபோர்ட் கிராமர் பள்ளியில் படித்தார். தனது பதினெட்டு வயதில் அன்னா ஹாத்வே என்ற பெண்ணை மணந்தார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். சூசன்னா, ஜூடித் , ஹாம்னட் என்பதுதான் பிள்ளைகளின் பெயர். சில ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியம் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். இதற்குள்ளாகவே அவருக்கு கவிஞர், நடிகர், நாடக ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்திருந்தது.
இவர் எழுதிய வரலாற்று நாடகங்களில் ஜூலியஸ் சீசர், ஐந்தாம் ஹென்றி, ஓத்தெல்லோ, மெக்பத், ஆகியவை முக்கியமானவை. நகைச்சுவை நாடகங்களான ஏஸ் யு லைக் இட், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், காதல் நாடகங்களான ரோமியோ ஜூலியட், ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகியவையும் முக்கியமானவை.
ஷேக்ஸ்பியர் கிளாசிக்கான எழுத்தாளர். இன்றும் கூட அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள், அதற்கான வசனங்கள், மையக்கதை அனைத்துமே முக்கியமானவை என்று புகழ்ந்து பேசப்பட்டு வருகின்றன.
ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பல்வேறு முக்கியமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நாடக மேடைகளை அலங்கரித்துள்ளது. திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று தனது 52 ஆவது வயதில் காலமானார் ஷேக்ஸ்பியர். இவரது இரு நண்பர்கள் 1623ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்ற ஷேக்ஸ்பியரின் படைப்புகளை பிரசுரித்தனர்.
டெல் மீ வொய் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக