மூழ்காது என்று சொல்லிக் கட்டப்பட்ட டைட்டானிக் கப்பல்!

 







ஆர்எம்எஸ் டைட்டானிக்




டைட்டானிக் கப்பல்

இங்கிலாந்தில் கட்டுமானம் செய்யப்பட்ட கப்பல் இது. அன்றைய காலத்தில் கட்டுமானம் செய்யப்பட்ட ஆடம்பர கப்பல்களில் டைட்டானிக் கப்பல் மிகப்பெரியது. 

1912ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று டைட்டானிக் கப்பலின் கட்டுமானம் நிறைவுபெற்றது. அந்த காலத்தில் அதிக ஆட்கள் வேலை செய்தது. இந்தக்கப்பலைக் கட்டத்தான். 14 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்த கப்பல் இது. உருவாக்கப்பட்டு எட்டே நாட்களில் அழிவை சந்தித்தது. இங்கிலாந்தின் சௌத்தாம்டனிலிருந்து கிளம்பிய கப்பல் திரும்ப வரவில்லை. 

இங்கிலாந்திலிருந்து கிளம்பி பிரான்சுக்கு சென்றுகொண்டிருந்த கப்பல், ஏப்ரல் 14 அன்று இரவு 11.40க்கு பனிப்பாறை மீது மோதியது. இதன் விளைவாக கப்பல் உடைந்து மூழ்க இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் ஆனது. இந்த விபத்தில் அந்த கப்பலில் பயணித்த 2200 பேரில் 1500 பேர் மரணமடைந்தனர். கப்பல் விபத்துக்குள்ளான வரலாற்றில் டைட்டானிக் கப்பல் சோகமான சாதனை படைத்த கப்பல் என்றே சொல்லலாம். 

விபத்து ஏற்பட்டாலும் கூட முழுகாது என்று இந்தக்கப்பலைக் கூறினார்கள். ஆனால், மட்டமான இரும்பைப் பயன்படுத்தி கப்பலைக் கட்டியதால் பனிப்பாறையில் மோதியவுடனே கடல் நீரை உள்ளே விட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். இதனைப் பற்றிய திரைப்படங்களும், ஆவணப்படங்களும் நிறைய எடுக்கப்பட்டுவிட்டன. அதனை காட்சி ரீதியாக பார்க்க விரும்பினால் இணையத்தில் தேடிப் பாருங்கள். 

டெல் மீ வொய் இதழ் 





கருத்துகள்