நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்! - மனுபிள்ளை, கனிஸ்க் தரூர், சம்ஹிதா அர்னி

 




(இடது)எழுத்தாளர் சம்ஹிதா அர்னி






சம்ஹிதா அர்னி

எழுத்தாளர், பெங்களூரு

சம்ஹிதாவுக்கு அப்போது நான்கு வயது. அவரது அப்பாவுக்கு வெளியுறவுத்துறையில் வேலை. அவரை கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணிமாற்றம் செய்தனர். அங்கு சென்றபோது, சம்ஹிதாவுக்கு நூலகத்தில் நூல்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 








அங்குதான் பல்வேறு புனைவு வடிவங்களில் மகாபாரத புராணக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூல்களை பலவிதமாக படித்தார். பிறகுதான், அதனை படமாக வரைய முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் வியாசரின் மகாபாரத த்தை எழுதினார். அதாவது வரைந்தார். இப்படி தனது பனிரெண்டு வயதில் நூலை வரைந்து உருவாக்கினார். தி மகாபாரதா  எ சைல்ட்ஸ் வியூ என்ற நூலை  வெளியிட்டுவிட்டார். அந்த நூல் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் தனது ஆர்வத்தை அவர் விடவில்லை. இதனால்தான் 2012இல் சீதாவின் ராமாயணத்தை அவரால் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ஏற்ற முடிந்தது.   இந்த நூலுக்கான படங்களை மொய்னா சித்ரகார் என்பவர் செய்தார்.  இதைத்தொடர்ந்து 

 தி மிஸ்ஸிங் குயின் நூலை 2013இலும், தி பிரின்ஸ் என்ற பீரியட் நாவலை 2019இலும் எழுதினார். 








கனிஸ்க் தரூர்


கனிஸ்க் தரூர்

எழுத்தாளர், நியூயார்க்

கனிஸ்க் தனது சகோதரருடன்  ஆறு வயதில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுவிட்டார். அங்குதான் அவரது சகோதரர் இஷான் இருந்தார். இவரது பெற்றோர் சஷி தரூர், டைலட் டாமா முகர்ஜி. 

ஓல்ட் டெஸ்டமென்ட், ஷனாமெ, தி பெர்ஷியன் புக் ஆப் கிங்க்ஸ் ஆகிய நூல்கள் கனிஸ்க் தரூரை ஊக்கப்படுத்தியது. பல்வேறு நாட்டுப்புற கதைகளை படித்துத்தான் எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தார். இப்படித்தான் 2016இல் ஸ்விம்மர் அமாங் தி ஸ்டார்ஸ் என்ற சிறுகதை நூலை எழுதினார்.  கதைகள்தான், மக்களை கற்பனை செய்ய வைக்கிறது. பல்வேறு பிரச்னைகளை அதில் பேசலாம் என பேசுகிறார் கனிஸ்க். 

தற்போது 15ஆம் நூற்றாண்டு நாவலை எழுதி வருகிறார். தனக்கு எழுத்து வேலை இல்லாதபோது, பிபிசி 4 டிவியின் மியூசியம் ஆப் லாஸ்ட் ஆப்ஜெக்ட்ஸ் என்ற நிகழ்ச்சியில் இணைந்து பங்களிக்கிறார். இதில் இராக், சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அழிந்துபோன பல்வேறு வரலாற்று சின்னங்களைப் பற்றி பேசுகிறார்கள். 


மனு பிள்ளை





மனு பிள்ளை 

எழுத்தாளர், லண்டன்

புனேவின் ஃபெர்குஷன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். காங்கிரஸ் எம்பி சசி தரூரின் உதவியால் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் மற்றும் பிபிசி வேர்ல்ட் சர்வீசஸ் ஆகிய இடங்களில் வேலை செய்தார். இப்படி பெரிய இடங்களில் வேலை செய்தது மனு பிள்ளையை அடுத்து என்ன செய்ய வேண்டுமென தூண்டியது.  தேசிய ஆவணங்கள், கேரள மாநில ஆவணக்காப்பகம் ஆகியவற்றில் பல்வேறு செய்திகளை படித்தார். இதன் விளைவாக தனது 25 வயதில், தி ஐவரி த்ரோன் குரோனிக்கல்ஸ
 ஃ ஆப் தி ஹவுஸ்  ஆப் திராவன்கோர் என்ற நூலை எழுதினார். இந்த நூலும் சிறப்பாக வெற்றி பெற்றது. இதன் விளைவாக, 2016இல் சாகித்திய யுவ புரஸ்கார் விருதும் கூட கிடைத்தது. மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் மனு பிள்ளை. வரலாற்றில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி எதிர்காலத்தில் நூல்களை எழுதுவார் என நம்பலாம். 

இந்தியா டுடே 



 



கருத்துகள்