இடுகைகள்

அழிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனைமரங்கள் விதைப்பு பெருநாட்டில் நிறுத்தப்படுகிறது!

படம்
காடுகள் அழிப்பில் பாமாயில் பங்கு! பெரு, கொலம்பியா நாட்டுக்கு அடுத்தபடியாக சூழல் கெடாமல் பனை மரங்கள் நடுவதாக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷன், உள்ளூர் அரசுகளோடு சேர்ந்து காடுகளைப் பாதுகாப்பதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் 2021ஆம் ஆண்டு பெரு நாடு, பாமாயிலுக்காக காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறும்.  இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்போம் என ஜூன்பால்மா எனும் பாமாயில் விற்பனைச் சங்கத்தைச் சேர்ந்த கிரிகோரியோ சென்ஸ் கூறியுள்ளார். பெருவில் 86 ஆயிரம் ஹெக்டேர்களின் பனைமரங்கள் பாமாயிலுக்காக விதைக்கப்பட்டுள்ளன. தற்போது, 31500 ஹெக்டேர்கள் புதிய பனைமரங்கள் விதைக்கப்பட உள்ளன. “காடுகள் அழிப்பைத் தடுப்பதில் அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் ஒன்றுபட்டால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சி. மாற்றங்கள் நடக்கும் என நம்புகிறோம்” என்கிறார் தேசிய வைல்ட்லைஃப் ஃபெடரேஷனைச் சேர்ந்தவரான  சகோன். பெரு நாட்டில் ஆண்டுதோறும் 1100 சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்