இடுகைகள்

துக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

படம்
  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என கேள்வி கேட்காத மனங்களே உலகில் இருக்காது. அந்தளவு சோகங்களை தனிப்பட்ட வாழ்க்கையில் ஒன்றாக எடுத்துக்கொண்டு அதை நினைத்தே வருந்துவது, தாழ்வுணர்ச்சி கொள்வது, விரக்தியாக சுற்றுவது, குடிக்கு அடிமையாவது எல்லாம் நடக்கிறது. உண்மையில் இப்படி நடக்கும் சோகமான விஷயங்களை நேரடியான ஒருவரின் குணம், அதிர்ஷடம் சார்ந்த பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் எதிர்மறையாக நினைப்பதே நடக்கிறது.  உலகில் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கிறது. கெட்டவர்களுக்கு மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என நிறைய மக்கள் முன்முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே, வாழ்க்கையின் போக்கில் நடைபெறும் கருத்துக்கு மாறான ஒரு சம்பவத்தைக் கூட அவர்களால் தாங்கமுடிவதில்லை. இதில் இன்னும் அபாயகரமான விஷயமாக மன அழுத்தம் முற்றி தற்கொலை வரை செல்வதுதான். இதைப் பற்றி விளக்கி மக்களுக்கு சிகிச்சை செய்த உளவியலாளர்தான் டோரத்தி ரோவே.  வேலை இழப்பு, புயல் சேதம், பெற்றோர் இறந்துபோவது என சம்பவங்கள் நடப்பதற்கு தனிநபரை குற்றவாளியாக்க முடியாது. அதை அவரே மனதிற்கு அருகில் வைத்துக்கொண்டு கவலைப்படுவது தவறு. இதில

நோ சொன்னால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

படம்
                    நோ சொல்லிப்பழகுவது கடினமாக இருக்கிறதா ? எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை . ஆனால் அப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு . இதனால் பிறருக்காக நிறைய விஷயங்களை ஓகே சொல்லி மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் அனேகம் . நோ என்று சொல்லுவது குழந்தையாக , சிறுவனாக இருக்கும்வரை ஓகேதான் . பிடிவாதக்காரன் என்று விட்டுவிடுவார்கள் . ஆனால் வேலையில் இதனை சொல்லும்போது அதனை எளிதானதாக பார்க்க மாட்டார்கள் . ஆம் , இல்லை என்று சொல்லப்படும்போது அது எப்படி மக்களிடம் விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள் . இதுபற்றி உளவியலாளர் டாக்டர் ஹாரியட் பிரைக்கர் தி டிசீஸ் டு ப்ளீஸ் க்யூரிங் தி பீப்பிள் ப்ளீசிங் சிண்ட்ரோம் என்ற நூலில் விளக்கியுள்ளார் . பொதுவாக அனைவருக்குமான நன்மையாக அனுசரித்து செல்வதாக ஒருவர் அனைத்து விஷயங்களுக்கும் சரி , ஆம் என்று சொல்வது முதலில் சரியாக செல்வது போலவே தோன்றும் . ஆனால் பிறருக்காக இப்படி செயல்படும் தன்மை , ஒருவருக்கு உடல்நலம் , மனநலத்தை அழித்து பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் .