இடுகைகள்

முத்தாரம் வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் படுகொலைகள்!

படம்
காதல் கொலைகள் ! ஐஸ்லாந்திலுள்ள Illugastaoir பண்ணையிலிருந்து ஓடிவந்த ஆக்னஸ் என்ற பெண் , பண்ணை வீடு தீ பற்றிக்கொண்டது என அலற , மக்கள் பலரும் ஓடிப்பார்க்க , அங்கு பண்ணை ஓனர் நாதன் கெட்டில்சன் , அவரின் நண்பரான பீட்டர் ஜான்சன் இருவரும் தீயில் உருளைக்கிழங்காய் வெந்திருந்தார்கள் . ஆனால் இருவரும் கத்தியால் குத்தியும் , சுத்தியலால் தாக்கப்பட்ட காயங்களை போலீசார் கண்டுபிடித்தனர் . அனைத்துக்கும் காரணம் , நாதனின் காதல் லீலைகள்தான் . இயற்கை மருத்துவரான நாதன் , உள்ளூர் கவிஞரான ரோசா , டீனேஜ் பெண் சிக்ரியர் என்ற இருவரையும் தெலுங்கு ஹீரோவாக லவ் செய்தார் . பொறாமையில் வெந்த ஆக்னஸ் , சிகர்ஸன் மற்றும் தோழி ஒருத்தியை சேர்த்து செய்த மர்டர்தான் இது என தெரியவந்தது . மூவரில் ஆக்னஸின் தோழிக்கு மட்டும் ஆயுள் தண்டனை . சிகர்ஸனுக்கும் ஆக்னசுக்கும் 1830 ஜனவரி 12 அன்று மரணதண்டனை . கோடாரியால் வெட்டப்பட்ட இருவரின் தலைகளும் அங்கேயே ஈட்டியில் குத்தி வைக்கப்பட்டன . சிலமணி நேரத்திலேயே இருவரின் தலைகளும் மிஸ்ஸிங் . பின் 1930 ஆம் ஆண்டில் Illugastaoir பண்ணையருகே ஜோர்ன் என்ற இடத்தில் தலையோடு இரு எலும்