பேச்சுரிமை என்றால் என்ன என்பதை முழுமையாக விளக்கி சிந்திக்க வைக்கும் நூல்!
ப்ரீஸ்பீச் நிகல் வார்பர்டன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் நிறைய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. வேலைவாய்ப்பின்மை காரணமாக வலதுசாரி மதவாதம் தலைதூக்கி வருகிறது. தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் மூலம் பயமும் வெறுப்பும் வளர்ந்து வருகிறது. ஏழை நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் செயலிகள் வழியாக வெறுப்பு பேச்சு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இந்த நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மெல்ல பறிபோகத் தொடங்கி வருகின்றன. ஃப்ரீஸ்பீச் என்ற நூல், பேச்சுரிமை என்றால் என்ன, அதற்கான கொள்கை, தத்துவங்கள், அதற்கு எழுந்த சவால்கள், மத மீறல்களைக் கலைப்படைப்புகள், மதத்தை பகடி செய்யும் திரைப்படம், நாடகங்கள் ஆகியவை பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. பேச்சுரிமை என்றால் என்ன, இதன் தொடக்கமாக ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஆன் லிபர்டி என்ற நூல் முன்வைக்கப்படுகிறது. இதில் எழுத்தாளர் மில், பேச்சுரிமை ஏன் முக்கியம். அதை காப்பது எந்தளவு அவசியம் என்று விளக்கி கூறியிருக்கிறார். இவர் கூறிய கருத்துகளை வாசித்தபிறகு, நூல் பேச்சுரிமைக்குள் வருவதாக கூறும் வெறுப்பு பேச்சு, ஆபாச ப...