இடுகைகள்

எர்த்ஷாட் பரிசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளின் மீது காற்று மாசுக்கு குறை சொல்வது தவறு1 - வித்யுத் மோகன், கண்டுபிடிப்பாளர்

படம்
    வித்யுத் மோகன் - டகாசார் 1280 × 960   வித்யுத் மோகன் கண்டுபிடிப்பாளர் அண்மையில் விவசாய கழிவுப்பொருட்களை உரமாகவும் , எரிபொருளாகவும் மாற்றும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார் . இதற்காக இவருக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்பட்டுள்ளது . அவரின் கண்டுபிடிப்பு பற்றியும் சூழல் பற்றியும் பேசினோம் . நீங்கள் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு சூழல் தொழில்நுட்பம் பற்றி படித்துள்ளீர்கள் காற்று மாசுபாடு பற்றிய கவனம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது ? நான் டெல்லியில்தான் பிறந்து வளர்ந்தேன் . அங்கு காற்று மாசுபாடு அதிகரித்தபோது , அதனால் நானும் எனது குடும்பமும் , நண்பர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டோம் . 2015-16 காலகட்டத்தில் காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது . இதில் பட்டாசுகளின் பங்கும் இருந்தது . குறிப்பாகவ விவசாய கழிவுகளை அதிகம் எரிப்பதால் 30 சதவீதம் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது . எனவே நான் கல்லூரியில் இதுபற்றி படித்தேன் . அப்போதே விவசாய கழிவுகளிலிருந்து வரும் கார்பன் அளவை கட்டுப்படுத்த்தவேண்டும் . கிராம மக்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உருவாகியத