இடுகைகள்

படிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

படம்
  பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள்.  அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிர

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியில் நேரும் உயிரிழப்புகளை தடுத்து புலிகளை காக்க முயல்கிறோம் - வீரேந்திர திவாரி

படம்
  வீரேந்திர திவாரி வீரேந்திர திவாரி தலைவர், வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா திவாரி, மகாராஷ்டிராவில் பணியாற்றி வருகிறார். காடுகளின் பாதுகாப்பு, அதில் வாழும் புலிகளின் அழிவு, அதை தடுக்க அமைப்பு செய்யும் முயற்சிகள் பற்றி பேசினோம். உங்கள் அமைப்பின் பங்களிப்பு பற்றி கூறுங்கள். நாட்டின் காடுகளிலுள்ள புலிகளைப் பாதுகாப்பது, அதன் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளை செய்வது. இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுப்பது ஆகியவற்றை வைல்ட் லைஃப் ஆஃப் இந்தியா அமைப்பு செய்கிறது. அடுத்து, புலிகள் வாழும் நிலப்பரப்பு, அதன் வரைபடம், அழிந்த புலிகளை மீட்பது, அதன் மரபணு சார்ந்த அடையாளம், தேவையான வனத்துறை ஊழியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறோம். உங்களது பார்வையில் இந்திய மாநிலங்களில் எவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன? கடந்த 50 ஆண்டுகளாக, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, உத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் புலிகளைக் காப்பது தொடர்பாக பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள். புலிகளைக் காப்பதில் உள்ள சவால்கள் என்னென்ன?   சட்டவிரோத வேட்டை, மின்சார வேலி, பாதுகாப்ப

ஐஏஎஸ் கனவுக்காக தட்டுவடை விற்கும் மாணவர்கள்!

படம்
  தட்டுவடை செட் பொதுவாக சினிமாக்கார ர்கள்தான் பாலத்தின் அடியில் தூங்கினேன். அக்கா கடையில் கடன் வைத்து இட்லி வாங்கினேன். இப்படி சுதந்திரப் போராட்டமே செய்துதான் படத்தை இயக்கினேன். ஜெயித்தேன் என டிவி பேட்டிகள் முதல் யூடியூப் பேட்டிகள் வரை சொல்லுவார்கள். படிப்பிற்காகவே போராடும் நிலை இன்னும் சமூகத்தில் இருக்கிறது. அதைப்பற்றியதுதான் இந்தக் கட்டுரை.  சேலத்தில் உள்ளது கோரிமேடு. இங்குள்ள சிறிய உணவுக்கடையைச் சுற்றி இளைஞர்களாக நிற்கிறார்கள். அனைவரும் வந்தது தட்டுவடை விற்கும் கடைக்காகத்தான். இதுதான் அந்த கடையின் சிக்னேச்சர் டிஷ். தட்டு வடையை சாண்ட்விட்ச் போல வைத்துக் கொடுக்கிறார்கள். அதில், கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா நிரம்பியுள்ளது. இதை தொட்டுச்சாப்பிட மிளகாய் சட்னி கொடுக்கிறார்கள்.  இதை வி கிஷோர், எம் தனகோடி என்ற இரு 12ஆம் வகுப்பு மாணவர்கள்தான் நடத்துகிறார்கள். இருவருக்குமே ஐஏஎஸ் தேர்வில் வெல்வதுதான் கனவு. எனவே தங்களுடைய குடும்பத்தை இதற்காக குறை சொல்லாமல் தங்கள் கல்விச்செலவை தாங்களே பார்த்துக்கொள்ள கடையைத் தொடங்கியிருக்கிறார்கள்.  கிஷோர், திருவேனி கார்டனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்

படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா

படம்
  வேரோட்டம்  முற்றுப்பெறாத குறுநாவல் கு.ப.ராஜகோபாலன் சென்னையில் கல்லூரியில் படிக்கும் திருவெழுந்தூர் பையனும், தஞ்சாவூர் பெண்ணும் காதல் வலையில் விழுகிறார்கள். இருவருமே பிராமணர்கள்தான். ஆனால் திருமணம் செய்வதில் பிரச்னை எழுகிறது. அதனை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை.  சந்திரசேகரன், கல்லூரியில் புகழ்பெற்ற ஆள். போட்டிகளில் கலந்துகொள்வது, படிப்பது என அனைத்திலும் முன்னணியில் நிற்பவன். அவன் மீது காதல் வயப்படும் பெண்களை அவன் பெரிதாக மதிப்பது கிடையாது. அப்படியிருந்தும் லலிதா என்ற பெண் அவன் போகும் இடமெல்லாம் வந்து என்னைப் பாரேன், என் அழகைப் பாரேன் என்று மௌனமாக மிரட்டுகிறாள்.  லலிதாவைப் பொறுத்தவரை கல்லூரில் உள்ள பெரும்பாலான ஆட்கள் தனது அழகுக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமை. ஆனால் சந்திரசேகரன் இவளை கண்டுகொள்ளவே இல்லை என்றதும் அவளது ஈகோ காயம்படுகிறது. அப்படியென்ன அவனுக்கு ஆணவம் என அவனைப் பின்தொடர்கிறாள். இப்படி நாம் இருவரின் மனவோட்டத்தை புரிந்துகொள்வது கதாபாத்திரங்களில் பெயர்கள், அதற்குப்பிறகு மனவோட்டம் என எழுதப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், திருவெழுந்தூர் கல்யாண பஞ்சாயத்துகள் கடித வடிவில்

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி

படிக்காம ஜெயிச்சோமடா! - இரண்டு வெற்றிக்கதைகள்

படம்
இந்தியாவில் சுயமாக ஏதாவது கற்று வென்றவர்கள் அதிகம். காரணம் நம்முடைய கல்விமுறை அப்படி. துறுதுறுவென ஓடுபவர்களை, யோசிப்பவர்களை பள்ளி விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் சமூகத்தில் உருப்படியான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ. .. மும்பையில் வாழும் அருண்குமார் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவரது கல்வித்தகுதி பத்தாவதுதான். எப்படி சாத்தியமாகிறது என அவரது குடும்பத்தினருக்கும் புரியவில்லை. அவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்கள். இவரது குடும்பம் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள மன்பூரில் வசிக்கிறது. ஆகாஷ், வீட்டு வேலைகளுக்கான உதவியாளராக வந்து இன்று கோடிங் கற்று ஐபோன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறார். இவரது தந்தை அசாம் போலீசில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டு டெல்லியில் வசித்தனர். டேராடூனில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சேர்க்கப்பட்டார்.  ஒருமுறை கல்விக்கட்டணத்தை அறை வாடகைக்காக செலவழித்துவிட்டார் ஆகாஷ். பள்ளி நிர்வாகம். அவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. உடனே தன் கிடாரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு இசை தொடர்பான வேலை கிடைக்கும் என வந்துவிட்டார். அங்கு ஹவுசிங்.

லவ் இன்ஃபினிட்டி: என்னைப் போலொருவள் கண்டுவிட்டேன்!

படம்
pinterst லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட் காதல் பற்றி உளறிக் கொண்டிருந்தேன் இல்லையா? நான் எந்த விதிகளுக்கும் உள்ளே வர விரும்பவில்லை. நான் ஒரு விஷயத்தில் சரியாக இருந்தேன்.  மற்றவர்களை என்னை நோக்கி இழுக்கவேண்டும். நாலுபேர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே இருப்பவர்கள் என்னைப் பற்றிப் பேசவேண்டும். அந்த எண்ணத்தினால் என் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு விலகிக் கொண்டிருப்பதை உணர்கிறேன்.   பிளஸ் 2 என் வாழ்க்கையில் தனி அத்தியாயத்தை தந்துள்ளது.  தேர்வு முடிவுகள் வந்தன. அனைவரையும் ஜெயித்தேன். அட இவனா! என்றெண்ணி எண்ணத்தராசில் கீழிறக்கி வைத்திருந்தவர்களின் மனதில் மேலேறினேன்.  எனது வெறியையும் வேகத்தையும் அறிவையும் விடைத்தாளில் கொட்டிவிட்டுத்தான் ஓய்ந்தேன். பல நாட்கள் உணவு உறக்கமின்றி உழைத்து விதைத்த விதைகளெல்லாம் மரமாகி பிஞ்சுகள் கனியாகி நிழலாற்றும் நெடுமரமானதில் மகிழ்ச்சியடையும் உழவனைப் போல மகிழ்ச்சியடைந்தேன் நான். எனது வாழ்வில் கிடைத்த முதல் அங்கீகாரம் இதல்லவா? ஆனாலும் வருத்தம் கொஞ்சம்.  எனது உயிர்த்தோழி கவி மதிப்பெண் சற்று மட்டம். எனது வெற்றியை என்னைவி

லவ் இன்ஃபினிட்டி: காதலிலும் கண்ணியம் தேவை!

படம்
pinterest லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: வித்யா மேகன், ரீது விஸ்வாஸ் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரிந்த பிறகு எனது தெரிவு அறிவியல் பிரிவில் சேர்வதுதான். ஆனால் கிடைத்தது கலைப்பிரிவுதான். சந்தோஷமாகத்தான் இருந்தது. எல்லோரும் பற்று வரவு வைத்துக்கொண்டு இருந்தபோது நான் மரங்களில் இருந்த விழுந்த பூக்களை எண்ணிக் கொண்டிருந்தேன். உதிரும் இலைகளின் சோகத்தில் பங்கு போட்டுக்கொள்வேன். எனக்கு வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத ஏழை மாணவனாக என்னைக் காட்டிக்கொண்டேன். எளிமை எனக்குப் பிடித்தமானது. அதனாலேயே பலருக்கு என்னைப் பிடிக்காமல் போனது. இருந்தும் எனது இலக்கிய ஆர்வத்ததினால் அனைவரையும் கவர்ந்தேன். பாதிநாள் பள்ளிக்கு கட் அடித்து படம் பார்த்து பொழுதுபோக்கி வாழ்க்கையை அழித்துக்கொண்டேன். முழுமூச்சாக படித்து கல்வியை எனதாக்கி கொண்டேன். பள்ளி இறுதியாண்டில் பலரின் சுயரூபம் தெரிந்தது. முகத்திற்கு முன்னால் சிரித்து முதுகிற்கு பின்னால் நச்சுப்பல்லைப் பதிக்கும் நச்சுப் பாம்புகளை கண்டு கொண்டேன். எப்போதும் கையில் கணக்குப் பதிவியல் நோட். கலைந்த தலை. பள்ளிக்கு வரு