லவ் இன்ஃபினிட்டி: காதலிலும் கண்ணியம் தேவை!
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: வித்யா மேகன், ரீது விஸ்வாஸ்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரிந்த பிறகு
எனது தெரிவு அறிவியல் பிரிவில் சேர்வதுதான்.
ஆனால் கிடைத்தது கலைப்பிரிவுதான்.
சந்தோஷமாகத்தான் இருந்தது. எல்லோரும் பற்று வரவு வைத்துக்கொண்டு இருந்தபோது
நான் மரங்களில் இருந்த விழுந்த பூக்களை எண்ணிக் கொண்டிருந்தேன்.
உதிரும் இலைகளின் சோகத்தில் பங்கு போட்டுக்கொள்வேன்.
எனக்கு வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத
ஏழை மாணவனாக என்னைக் காட்டிக்கொண்டேன்.
எளிமை எனக்குப் பிடித்தமானது. அதனாலேயே பலருக்கு என்னைப்
பிடிக்காமல் போனது. இருந்தும்
எனது இலக்கிய ஆர்வத்ததினால் அனைவரையும் கவர்ந்தேன்.
பாதிநாள் பள்ளிக்கு கட் அடித்து படம் பார்த்து பொழுதுபோக்கி
வாழ்க்கையை அழித்துக்கொண்டேன்.
முழுமூச்சாக படித்து கல்வியை எனதாக்கி கொண்டேன்.
பள்ளி இறுதியாண்டில் பலரின் சுயரூபம் தெரிந்தது. முகத்திற்கு முன்னால் சிரித்து முதுகிற்கு பின்னால் நச்சுப்பல்லைப் பதிக்கும் நச்சுப் பாம்புகளை கண்டு கொண்டேன்.
எப்போதும் கையில் கணக்குப் பதிவியல் நோட். கலைந்த தலை. பள்ளிக்கு வருவேன்
பரீட்சையின் முதல்நாள் படிப்பேன்.
ஆனாலும் பாடங்கள் எனக்கு
அந்நியமில்லை. அதற்காக
படிக்காமல் போவது கண்ணியமில்லை.
பதினாறில் வரும் காதல் எனக்கும்
வந்தது. காதலைப் பொத்தி வைத்து
எனக்குள்ளேயே பூட்டிக் கொண்டேன்.
காதல் என்பது கிறுக்கு உணர்ச்சியின் கிளர்ச்சி என்ற
வைரமுத்துவின் வரிகளை வாசித்து நான் புரிந்துகொண்டேன்.
(காதல் சொல்லுவேன்)