லவ் இன்ஃபினிட்டி: கவி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!
imgur.com |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: விதேஷ் தேஷ்முக், ஷிரவந்தி
ஸ்கூல் லவ் எல்லாம் பார்த்தோம். அதை பின்னாடி நான் எழுதுவேன். முதலில் என் தோழி கவியைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கவி சொந்தக்காரின்னாலும் டவுனில் வளர்ந்தவள். காசு வித்தியாசம் எப்பவும் சொந்தங்களுக்கிடேயே கத்தி மாதிரி இருக்கும.
சாதின்னாலும் கல்யாணம்னு வரும்போது அந்தஸ்து பார்த்து தூரத்து சொந்தங்களுக்கு பொண்ண குடுக்கிறாங்களே அது எதுக்கு? சொந்தம்கிறதை விட காசுங்கிறது எப்பவும் அல்டிமேட். கவியோட வசதியும் அப்படித்தான். காசு வெச்சிருக்கிறவங்க கொஞ்சம் அதுக்கேத்தா மாதிரி அலட்டலா இருப்பாங்க. ஆனா கவிகிட்ட அதுமாதிரி பந்தா ஏதும் கிடையாது.
பிரியமா எல்லார்த்துக்கிட்டேயும் பேசுவா. எப்பவும் உற்சாகமா இருக்கிற அவளோ முகத்தை நான் போன் வாங்குனா ஸ்கீரின் சேவரா வால்பேப்பராக வைக்கணும்கூட நினைச்சிருந்தேன். எனக்கு கிடைச்ச 1100 வில, வால்பேப்பர் செட்டிங்கே கிடையாது என்ன செய்வேன்?
பள்ளிக்கூட பாடங்களைப் பொறுத்தவரை கவி சுமார்தான். ஆனா மத்த விஷயங்களில் செம கெட்டி. அதுவும் ஃஅவளோடு ஃபிரெண்ட்ஸா உயிரையே விடுவா. பணக்காரங்ககிட்ட எரிச்சலாகிற குணம், யாரையும் மதிக்காம நடந்துக்கிறது. ஆனால யாரையும் உட்காரச்சொல்லி பேசுற குணம், சாதாரணவங்ககிட்டேயும் பாகுபாடு காட்டாம பிரியம் காட்டுறதுன்னு கவி எப்பவும் எல்லார் மனசுலயும் டாப்தான்.
சரி இப்போ, அவ எழுதி வெச்ச பாரதியார் கவிதையைப் பார்த்திடுவோம்.
இந்திக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் - நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே
செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும்
தேகமிருந்தொரு லாப முண்டோ!
விந்தை தமிழ்மொழி எங்கள் மொழி - அது
வீரத் தமிழ்மக்கள் ஆவி என்போம்
இந்திக்குச் சலுகை தந்திடுவோர் - அந்த
ஈனரைக் காறி யுமிழ்ந்திடுவோம்
இப்புவி தோன்றிய நாள் முதலாய் - எங்கள்
இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்.
தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை - இந்த
தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ
எப்பக்கம் வந்த புகுந்துவிடும் - இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்
அற்பமென்போம் அந்த இந்திதனை - அதன்
ஆதிக்கந் தன்னை புதைத்திடுவோம்
எங்கள் உடல்பொருள் ஆவியெல்லாம் - எங்கள்
இன்பத் தமிழ் மொழிக்கே தருவோம்
மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள்
மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்.
சிங்கமென்ற இளங்காளைகளே மிகத்
தீவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைந்திடில் தாய்மொழிக்கே - உடற்
பச்சை ரத்தம் பரிமாறிக்கொள்வோம்.
தூங்குதல் போன்றது சாக்காடு - பின்னர்த்
தூங்கி விழிப்பது நம் பிறப்புத்
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம்
தித்திப்பை எண்ணிடப் போவதில்லை.
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - நமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை
ஏங்கவிடோம் தமிழ் தாய்தனையே - உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும் வரை! (9.8.2002)
2002 ஆவது வருஷம் அவ எழுதின கவிதை. இப்போ ஃபைவ் ஸ்டார் படப்பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன். அனுராதா ஸ்ரீராமின் அற்புத இசை. ரயிலே ரயிலே ஒரு நிமிஷம், என் ரதியைப் பார்க்க நிற்பாயான்னு காதில் கொஞ்சுது. நட்பைப் பற்றி பேசியதும் காதல் ஜங்ஷனுக்குப் போயிடறேன். வாழ்க்கையே ஜம்ப் கட்டாகி ஓடுறதுதானே?
(காதல் சொல்லுவேன்)