லவ் இன்ஃபினிட்டி: நிஜம் சொல்லடி தோழி!



pinterest


லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அரசு கார்த்திக்

நான் என்னைப் பற்றி நிறைய உனக்கு சொல்லிவிடணும்னு நினைக்கிறேன். ஆனால் என் மனசும் எழுத்தும் அதற்கு உதவுமான்னு எனக்கு தெரியல.

நான் நிறைய உங்கிட்ட பேசணும்னு நினைச்சு College வந்தால் உன் முகத்தைப் பார்த்ததும்  I'm Gone. பொய்யில்லை. என்ன பேசணும்னு அத்தனையையும் மறந்து போயிடுறேன். ஆணும் பொண்ணும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வெச்சிருக்கிற நட்பு காதலை விட புனிதமானதுன்னு நான் நம்புறேன்.

பிரிய தோழி! உன் கண்களில் கண்ணீர் வர நானும் ஒரு காரணம் என்பது வலிக்க வைக்கிறது. யாரோ சிலரால் நாம் பாதிக்கப்பட்டுவிட்டோம். ஆனாலும் இதற்கு நான் காரணம்னு நினைக்கும்போது குற்றவுணர்ச்சி கண்ணில் விழுந்த தூசியாக உறுத்துகிறது.

இது உன் மனசுக்கும் தெரியும். அதனால்தான் என்கூட பேசுவதற்கு நீ மறுக்கிறாய். இல்லையா? அப்படியில்லையென்று சொல்லேன். Please. நீ அப்படி சொல்வாய் என்றுதான் வகுப்பில் உன் முகம் பார்த்தே உட்கார்ந்திருக்கிறேன். பாராமுகமாய் அமர்ந்து மனம் உடைக்கிறாயே!

என்னைப் பற்றி எழுதியவைகளில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கிறது. அதையெல்லாம் உன்னிடம் நேருக்கு நேராக சொல்லவேண்டும் என்று ஆசை.

நீ என்னை சந்தேகப்பட்டது வேதனையாக இருந்தது. என்னை எப்படி நீ சந்தேப்படலாம். தப்புத்தான். சந்தேகப்பட்டாலும் என்னை நீ ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் இல்லையா? ஏய் நீ இப்படி சொன்னியா?

எனக்கு உன்மேல் செம கோபம். பிறகுதான் தெரிந்தது. அப்புறம்தான் புரிந்துகொண்டேன். ஒருவரின் மேல் அதிகமாக பிரியம் அன்பு வைத்தாலை அவரின் குறைகள் தெரியாது என்று. இதை நேரில் பார்த்தேன்.

என்னை உன் தோழனாக ஏற்றுக்கொள்வாயா? அப்புறம் நேரம் வரும்போது ரிலேசன்ஷிப்பை அப்டேட் செஞ்சுக்குவோம். என்னிடம் ஏதாவது சிக்கல் தவறு இருந்தால் தட்டிக்கேள். புரியுதா?  மை டியர் Mythili  இனி நமக்குள் பிரிவு என்பதே கிடையாது. எப்படி உன்னால் அறிவாளியாகவும் குழந்தையாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது? நீயும் நானும் ஒரேமாதிரி யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. உன்னோடு பேசினால்தான் நிம்மதி. புரியாத புதிர் நீ. நானும் நீயும் ஒரே மாதிரி யோசிக்கிறோமோ என்னவோ தெரியவில்லை. உன்னோடு பேசினால்தான் நிம்மதி எனது இன்பங்களையும் துன்பங்களையும் உன்னோடு பகிர்ந்து கொள்ள எனக்கு உடன்பாடுதான்! உனக்கு?


பாதை மாறி நான் போனால் வழிகாட்டவும், வழித்துணையாகவும் நீ வரவேண்டும். இந்த வேர் விழுந்துவிட்டால் விழுதாக நீ இருக்கணும். சரிசரி கெஞ்சல்களை நிறுத்திக்கொள்கிறேன். உன் கவிதைகளைப் பற்றி இனி.

பெண் கவிஞர்கள் என்று நீங்கள் சொன்னாலும் அதில் கொலுசு ஓசையும், பூ வாசனையும் எங்கே இருக்கிறது? உன் திறமையை வளர்த்துக்கொள்ள Library இல் உள்ள தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் படி குறிப்பாக குறிஞ்சித்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை மற்றும் சங்கப்பாடல்கள் படி. என் கவிதைகளை எல்லாம் எப்படி படித்தாய் என்றே சந்தேகம் வருகிறது.

மரபுக்கவிதைகளை எழுதிப்பார் ஓய்வுநேரத்தில். நல்ல தரமான இலக்கியம், புதினங்கள், கவிதை புக்குகளை படிச்சு Knowlege  improve பண்ணிக்கொள். நெடுநேரம் உன்னோடும் உன் பேச்சை கேட்டபடியும் இருக்க சந்தர்ப்பம் அமையுமா? பார்க்கலாம்.

நீ இருப்பதால் ஆறுதலாக இருக்கிறது. நிறைய எழுதிவிட்டேன் போல. சுமைகளையெல்லாம் இதில் இறக்கியபின்தான் நிம்மதியாக இருக்கிறது. என் உள்ளத்தில் இருப்பதில் ஒரு பாதியை உன்னிடம் சொல்லிவிட்டேன். மறுபாதி என் நேசத்தையும் சொல்வேன். என்றும் உன் வாழ்க்கையில் வசந்த காலம் தொடர வாழ்த்தும் அன்பு நெஞ்சன் உன் மோகன்.

காலேஜில் சந்திப்போம்.

(காதல் சொல்லுவேன்)






பிரபலமான இடுகைகள்