கண்டுபிடிப்புகளின் தேசம் எது?



Image result for california
Church Militant




கண்டுபிடிப்புகளின் தேசம்

அமேசான் வலைத்தளத்தில் 238 கண்டுபிடிப்புகளுக்கான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் வடக்குப்பகுதி நகரங்களில் அதிகளவு ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் தென்படுகின்றன.

2000 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில்  கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா கிளாரா பகுதி அதிகளவு காப்புரிமைகளைப் பெற்றிருந்தது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் காப்புரிமைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கடுத்து சான்டியாகோ நகரம் இடம்பெற்றுள்ளது.

இதோடு பாஸ்டன், சியாட்டில் ஆகிய நகரங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவையாக உள்ளன. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட், பீனிக்ஸ் ஆகிய நகரங்களும் உண்டு. ஆராய்ச்சிகள் அதிகரிக்க காரணம், கல்வி கற்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும், கற்றவர்கள் அதிகரித்துள்ளதும், ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவழிக்கப்படுவதும்தான்.

சான்டா கிளாராவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் , சிலிகன் வேலிக்கான பொருளாதாரத்தை உருவாக்கும்படி ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன. பனிக்காலத்தின்போதும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. அமெரிக்காவிலேயே அரை லட்சம் பேர்களுக்கு மேலாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இது, நாட்டிலேயே அதிக சதவீதமாகும்.

2000 -2015 வரையிலான கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரையில் கலிஃபோர்னியா மாநிலமே முன்னணியில் உள்ளது. அங்குள்ள ஆறு நகரங்கள் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளன.

நன்றி: தி கன்வர்சேஷன்