கல்வியில் தடுமாறும் இந்தியா!
franchise india |
இந்தியா, சீனாவை விட மூன்று மடங்கு அதிக பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் கல்வித்தரத்தில் பலமடங்கு கீழே உள்ளது. என்ன காரணம் உள்ளது?
கல்வி உரிமைச்சட்டம் நூறு சதவீதம் கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் கல்வியில் குறிப்பிட்ட தரத்தை கொண்டு வர அரசு தடுமாறி வருகிறது. தற்போது நிதி ஆயோக், கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் பிரச்னைகளுக்கான வேராக உள்ளது, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படாதே ஆகும்.
”இந்தியா எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் ஆபத்து ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும். இந்த சூழலில் கல்வியில் சிறந்த திறனை எட்டுவது என்பது மிகவும் சிரமம்” என்கிறார் நிதி ஆயோக் ஆலோசகரான ஆலோக் குமார் மற்றும் சீமா பன்சால்(இயக்குநர், போஸ்டன் ஆலோசனை நிறுவனம்)
சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் பதினைந்து லட்சம் பள்ளிகள் இயங்கியும் நம் குழந்தைகளுக்கு சரியான கல்வியை பயிற்றுவிக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள நான்கு லட்சம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 50 தான் என்றால் நம்புவீர்களா?
அதேசமயம் மறுபுறம் 1.5 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பின்றி தவித்து வருவதும் அதே இந்தியாவில்தான். என்ன பிரச்னை?
இந்தியாவில் பத்து லட்சம் ஆசிரியர்களின் தேவை உள்ளது. ஆனால் இத்தேவை அடையாளம் காணப்பட்டும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இதற்கான தீர்வு, உபரியான ஆசிரியர்கள் பற்றாக்குறை இடத்திற்கு மாற்றப்படுவதும், புதிய ஆசிரியர்களை பணியிடங்களுக்கு மாற்றுவதுமே ஆகும்.
2. பொருத்தமில்லாத பாடத்திட்டங்களும், குறைந்த கல்வித்திறனும் இந்தியாவின் கல்வி அடிப்படையை அரித்து வருகிறது. ஆசிரியர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான முறைகளை கண்டறிந்து மேம்படுத்துவது அவசியம்.
3. ஆசிரியர்களின் நியமனம் மற்றும் தேர்வு ஆகியவற்றில் நல்ல தேர்ச்சியைக் காண்பது அவசியம். இதற்கு அடுத்து கல்வி பட்ஜெட்டிற்கு நிதி உதவிகளை அதிகரித்து, அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது அவசியம்.
அண்மையில் வெளியான ஏசர்(ASER) திட்ட அறிக்கை, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பாதிப்பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை என வெளிச்சமிட்டு காட்டியது. மேலும் பள்ளி இடைநிற்றல் அளவும் அதிகரித்துள்ளது. முதல் வகுப்பில் சேர்பவர்களில், 30 சதவீதம் பேர் மட்டுமே இறுதியில் பட்டதாரிகளாக படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஹரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், மாணவர்களுக்கு கல்வி என்பதைத் தாண்டி பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ளும்படி கல்வியை மாற்றியுள்ளனர்.
நன்றி: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா