வன்முறையைத் தூண்டுகிறதா இசை?



What does listening to heavy metal do for me? © Getty Images
பிபிசி






மெட்டல் மியூசிக் வன்முறையைத் தூண்டுகிறதா?


பொதுவாக ஹெவி மெட்டல் எனும் இசைவகை, வன்முறை கொண்டதாக பலரும் பார்க்கிறார்கள். டாட்டூ குத்தியபடி கிடாரின் கம்பிகள் அறுந்துவிழும் வேகத்தில் இசைக்கும் இசையை பலரும் கேட்டு கெட்ட ஆட்டம் போடுவது உலக வழக்கம். அப்போது அத்தனை பேரின் மனநிலையும் வன்முறையை நோக்கித்தான் குவிகிறதா? என்று ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகள் அப்படி அல்ல என்று கூறிவிட்டன.

பார்க்கும் படம், சாப்பிடும் உணவு ஆகியவற்றை வைத்து ஒருவரின் கேரக்டரை வரையும் பழக்கம் இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே உண்டு. இசை கேட்பதும் அதில் ஒன்றுதான். வன்முறையான தீமில் இசை கேட்பது, மனதில் வன்முறையை ஏற்படுத்தும் என்பது தவறு மேக்குவார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

வறுமை, உறவு, போதைப் பொருட்கள் பயன்பாடு, தனிமை உணர்ச்சி ஆகியவையும் இதனோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இதுபற்றி, ஒருவர் நீண்டநாட்கள் குறிப்பிட்ட வகையிலான இசையைக் கேட்பது அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதோடு,  உள்மன ஆசைகளையும் கூறுகிறது என்கிறார். ஆனால் இந்த கருத்துகளையும் தாண்டி மெட்டல் இசை கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்காக இரண்டு வன்முறையான படங்களை இரு கண்களாலும் பார்க்கச்சொன்னபோது, மெட்டல் இசைப்பிரியர்களும் பிறரும் அது பற்றி கூறிய கருத்து பெரியளவு மாறுபடவில்லை. எனவே தேவா இசை கேட்டாலும், கே.வி.மகாதேவன் இசை கேட்டாலும் அது குறிப்பிட்ட ஒருவரின் மனநிலை, விருப்பம் சார்ந்ததே தவிர வன்முறை சார்ந்தது கிடையாது.


நன்றி: பிபிசி