இடுகைகள்

பிரதமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

ஜவகர்லால் நேருவுக்கு வரலாற்று ரீதியான மரியாதையை நாங்கள் வழங்கியுள்ளோம்! - நிரிபேந்திர மிஸ்ரா

படம்
  நிரிபேந்திர மிஸ்ரா நிரிபேந்திர மிஸ்ரா தலைவர், நேரு நினைவு அருங்காட்சியகம் புதிய அருங்காட்சியகம்  நாட்டின் முதல் பிரதமரான நேருவிற்கு நியாயம் செய்துள்ளதா? நாங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பிரதமர்களைப் பற்றிய தகவல்களை முடிந்தவரை சரியாக  சேகரிக்க முயன்றிருக்கிறோம். சீனாவுடன் நடந்த 1962 போர் பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இந்த போரின்போது இந்தியா சரியான முறையில் தயார்படுத்தப்படவில்லை. நான் கூறும் கூற்றை உறுதிப்படுத்தும் கடிதங்கள் கிடைத்துள்ளன. 1975ஆம் ஆண்டு காலத்தில் இந்தியா ஓரளவுக்கு போருக்கு தயாராக இருந்தது. ஆனால் இதை விமர்சிக்க ஒன்றுமில்லை. ஏனெனில் நாம் நாடு இந்த முறையில் தான் பரிணாம வளர்ச்சி பெற்றது.  ஜவகர்லால் நேருவின் இடம் பற்றி கவனம் எங்களுக்கு எப்போதுமே உண்டு. அவர் பல்வேறு அடிப்படையான நிறுவனங்களை உருவாக்கினார். ஜனநாயக முறையை அவரே உருவாக்க உழைத்தார். பிரதான் மந்திரி சங்கராலாயாவில் முதல் பிரதமர் நேரு திட்டக்குழுவை உருவாக்கியது, நாடாளுமன்றத்தை கட்டியது என பல்வேறு விஷயங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துணை கண்காட்சி மையங்கள் உள்ளன. இவற்றைப் பார்க்கும

ஜெசிந்தா ஆர்டன் சிறந்த தலைவரா?

படம்
  ஜெசிந்தா ஆர்டென் நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆர்டென் அந்நாட்டின் பிரதமர், அங்கு செயல்படும் தொழிலாளர் கட்சியில் தலைவராகவும் உள்ளார். 2008ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.  2017ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, நியூசிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரின் வயது 37. இந்த வயதில் அங்கு பிரதமராவது பெரிய விஷயம். இப்படி ஆனது இவர் ஒருவர்தான். இதற்காக நாம் இவரைப் பற்றி இங்கு எழுதவில்லை.  சிறுபான்மையினரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும் காட்சி 2019இல் கொரோனா ஏற்பட்டபோது, நியூசிலாந்தில் ஏற்பட்ட பாதிப்பை எளிதில் சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் முக்கி முனகிக்கொண்டு இருந்தன. ஆனால் நாம் வித்தியாசமானவர்கள் அல்லவா?  நம்நாட்டில் விளக்கு பூசை, சாப்பாட்டு தட்டை தட்டுவது போன்ற கோமாளித்தனங்கள் நடந்துகொண்டிருந்தன.  ஜெசிந்தா, தனது நாட்டில் நோயைக் குறைக்கும் செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தார். விரைவிலேயே பாதிப்பைக் குறைத்து கோவிட் இல்லாத  நாடு என்ற பெயரை சம்பாதித்தார். இதனால்தான் அவரை சிறந்த தலைவர் என்று அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். மேலும் அவரது நாட்ட

இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

படம்
  இந்தியா 75 இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை ஜவகர்லால் நேரு பிரதமர் நவ.14, 1889 - மே 27, 1964 சர்தார் வல்லபாய் படேல் உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அக்.31, 1875 - டிச. 15, 1950 ஆர்.கே. சண்முகம் செட்டி நிதித்துறை  அக்.17, 1892 - மே 5, 1953 சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்புத்துறை  ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961 ராஜேந்திர பிரசாத் விவசாயம் மற்றும் உணவு டிச.3, 1884 - பிப்.28, 1963 மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறை நவ.11, 1888 - பிப்.22, 1958 ஜான் மத்தாய் ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை ஜன் 10, 1886 - நவ.2, 1959 பி.ஆர். அம்பேத்கர் சட்டம் ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956 ஜெகஜீவன்ராம் தொழிலாளர் துறை  ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986 சிஹெச் பாபா வணிகத்துறை ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986 ரஃபி அஹ்மத் கித்வால் தகவல்தொடர்பு பிப்.18, 1894 - அக்.24, 1954 ராஜகுமாரி அம்ரித் கௌர் சுகாதாரத்துறை பிப்.2, 1887 - பிப்.6, 1964 சியாம பிரசாத் முகர்ஜி  தொழில்துறை மற்றும் விநியோகம் ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953 என்வி காட்கில் மின்சாரம் மற்றும் சுரங்கம் ஜன் 10, 1896 - ஜன் 12, 1966 டைம்ஸ் ஆப் இந்தியா

அதிக மசோதாக்கள் தாக்கலாகியுள்ளது எனது சாதனை! - ஒம் பிர்லா மக்களவை சபாநாயகர்

படம்
                  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்றோடு நீங்கள் மக்களவை சபாநாயகராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது . உங்கள் அனுபவத்தை பகிருங்களேன் . எனது அனுபவம் நன்றாக இருக்கிறது . அவையில் பிரதமர் , உறுப்பினர்கள் என அனைவருமே ஜனநாயகத்தின் நம்பிக்கை வைத்து அதனை காப்பாற்றவே செயல்பட்டு வருகிறார்கள் . அவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பேசுவதற்கு வா்ய்ப்பு கொடுக்க முயன்று வருகிறேன் . இரண்டு ஆண்டுகளில் 107 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன . மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் 90 சதவீதம் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது . முதலில் இதன் அளவு 40 சதவீதமாக இருந்தது . உறுப்பினர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது . இது மக்களவையின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது . புதிய உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் . இதுதொடர்பான உங்கள் அனுபவம் என்ன ? முதல் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெற்றது . இதில் 35 மசோதாக்கள் நிறைவேறின . இதுதான் உற்பத்தி திறனுக்கு அடையாளம் . ஒருநாளில் ஜீரோ ஹவரில் 161 பேர் பேசினார்கள் . இது முக்கியமான சாதனையா

அதீத தேசியவாதம் உலக நாடுகளிடையே உள்ள கூட்டுறவைக் குலைக்கிறது!- சிவசங்கர் மேனன்

படம்
            சிவசங்கர் மேனன் முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர் இவர் தற்போது சாய்சஸ் இன்சைட் தி மேக்கிங் ஆப் இந்தியன் பாரீன் பாலிசி என்ற நூலை எழுதியுள்ளார் . இந்த நூலைப்பற்றியும் தற்போது உள்ள அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம் . வரலாற்றில் நிலப்பரப்பு என்பதை ஏன் முக்கியமாக நினைக்கிறீர்கள் ? நாம் உலக அரசியல் நடப்புகளில் பங்கேற்றுள்ளோம் . இதில் வலிமை வாய்ந்த நாடுகள் , அணிசேரா நாடுகள் ஆகியவை உள்ளடங்கும் . இந்தியா - அமெரிக்கா , இந்தியா - ரஷ்யா , இந்தியா - சீனா ஆகிய கூட்டணிகள் வரலாற்றில் உள்ளன . நாம் எப்படி உருவாகினோம் . எந்த இடத்தில் உருவாகினோம் என்பதை இன்று மறந்துவிட்டோம் . நிலப்பரப்புரீதியான அரசியல் என்பதில் வரலாறு , ஆதாரங்கள் , நிலப்பரப்பு ஆகியவை முக்கியமானது . நீண்டகால நோக்கில் பயனளிக்கும் விஷயங்களை செய்யவேண்டும் . சீனா இப்போது வளர்ந்து வரும் முக்கியமான நாடாக உள்ளது . ஆனால் அதிலும் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது . இந்தியாவில் கூட இதே விதமாக தேசியவாதம் ஆதிக்கத்தில் உள்ளது . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? தேசியவாதம் என்பது ் 19 ஆம் நூற்றாண்டில் ஐரோ

மக்கள்தொகை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறதா?

படம்
மக்கள்தொகை கட்டுப்பாடு! பிரதமர் மக்கள்தொகை கட்டுப்பாடு பற்றிய தன் கவலையை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார். இதைப்பற்றி நாளிதழில் படிக்கும்போது, அருகிலிருந்தவர்கள் நாடோடி மனிதர்கள் எப்படி இத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என விவாதித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்களது பேச்சில் இருந்தது பேராசையா, பொறாமையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்துவிட்டுப் போகட்டும். உண்மையில் பேட்டி பச்சாவோ திட்டத்தை இந்தியர்கள் கைவிட்டு ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி என்பது 2001-2011 வரையில் 1.64 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2011 சென்சஸ் படி குறிப்பிடப்பட்ட அறிக்கை. உலகவங்கியின் அறிக்கைப்படி 2001 முதல் 2018 வரை 1.04 என மக்கள் தொகை குறைந்தே வந்திருக்கிறது. பொருளாதார அறிக்கை 2018-19 படி, பனிரெண்டு மாநிலங்களில் மக்கள்தொகை சதவீதம் 1 எனவே உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உ.பி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்து காணப்படுகிறது. தகவல்கள் வட இந்தியாவில்தான் மக்கள்தொகை சதவீதம் அதிகம் என காட்டுகிறது. இந்

அமைதியைக் குலைத்த இஸ்ரேல் பிரதமரின் வெற்றி!

படம்
இஸ்ரேலின் நீண்டகால அதிபர்! வேறுயார்? பாலஸ்தீனத்தை கடுமையாக தாக்கி அப்படியொரு நாடே இல்லை என்று கூறிய பெஞ்சமின் நேடான்யாஹூதான் அவர். ஐந்தாவது முறையாக அதிபராகி சமாதானம் விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். இதுபோல இந்தியாவிலும் மோடி வென்று வர வாய்ப்புள்ளது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பென்னி கன்ட்ஸைத் தோற்கடித்து பெஞ்சமின் நேடான்யாஹூ வென்றுள்ளார். பெஞ்சமின் மற்றும் அவரது சகாக்கள்மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும் அத்தனையிலும் மீண்டு ஊடகங்கள், நாட்டின் நீதித்துறைக்கு எதிராக பேரணி நடத்தி தேர்தலிலும் வென்று காட்டிவிட்டார். பெஞ்சமினின் வெற்றி, குறைந்தபட்சம் பாலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இருந்த பிரச்னைகளை தீர்க்கும் என்று நினைத்த நம்பிக்கையைக் கூட அழித்துவிட்டது என்று கருத்து சொல்லியிருக்கிறார் முன்னாள் பிரதமர் ஈஹட் பாரக்கின் பிரதம செயலரான ஜில்லீடு ஷெர். நன்றி: டைம் இதழ்